தற்கொலைப்படை தீவிரவாதிகளின் கொலை பட்டியலில் சோனியா _ மோடி பெயர்கள்
புதுடெல்லி, பிப். 8_
தற்கொலைப்படை தீவிரவாதிகளின் கொலை பட்டியலில் சோனியா, மோடி ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருப்பதாக உளவுத்துறை திடுக்கிடும் தகவல்.
பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானியை கொல்ல தற்கொலைப்படை தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து அத்வானியை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் சந்தித்து, அத்வானி தொடங்க இருந்த யாத்திரையை கைவிடுமாறு அவரிடம் கேட்டுக்கொண்டார்.
ஆனால் பா.ஜ.க. தலைவர்கள் இதுபற்றி ஆலோசித்து முடிவெடுத்தனர். அதன்படி, உளவுத்துறை எச்சரிக்கையை மீறி அத்வானி தனது யாத்திரையை தொடங்கியுள்ளார். இதையடுத்து அவருக்கு வழியெங்கும் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இயங்கிவரும் தற்கொலைப்படை தீவிரவாதிகளின் கொலை பட்டியலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருப்பதாக உளவுத்துறை மற்றொரு திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.
இவர்களில் மோடியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், தீவிரவாதிகளின் கொலை பட்டியலில் சோனியா பெயரும் இருப்பது இப்போது தெரியவந்துள்ளது என உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காஷ்மீர் முதல்வர் குலாம் நபி ஆசாத்துக்கும் மிரட்டல் இருப்பதை கூறிய அவர், அவருக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். சோனியா, மோடி போன்ற தலைவர்களை தாக்குவதற்கு 5 பேர் கொண்ட தற்கொலைப்படை இந்தியாவில் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த தகவலால் அரசியல் வட்டாரங்கள் பரபரப்பு அடைந்துள்ளன.
http://www.thinaboomi.com/2008/feb/08/politics/politics1.php
இந்த செய்தியை வாசித்து முடித்தாகி விட்டதா?
என்ன தலைப்புக்கும் விடயத்துக்கும் சம்பந்தமில்லை என்று தோன்றுகின்றதா..? நீங்கள் ஆழ்ந்து சிந்திக்கவில்லை என்று நினைக்கின்றேன். ஆழ்ந்து சிந்தித்திருந்தால் இந்தச் செய்தியின் பின்னால் உள்ள உண்மை உங்களுக்குப் புரிந்திருக்கும்.
மத்திய புலனாய்வுத்துறையின் அறிக்கை இப்போது தான் வெளியாகி இருக்கின்றது. இது மத்திய ஆட்சியில் தொடர்புடைய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தொடர்பானது. அத்துடன் தீவிரவாத இந்துத்துவ கொள்கைகளைக் கொண்ட பாரதீய ஜனதாவின் அத்வானி மற்றும் நரேந்திர மோடி ஆகியோர் இதில் சம்பந்தப்பட்டிருப்பதனாலும் அனைத்துத் தரப்பினரின் பார்வையும் இப்போது முஸ்லீம்களின் பக்கம் திரும்பியுள்ளது.
இல்லாவிட்டால் இலங்கை அகதிகளின் வருகையையே சகிக்க முடியாது விடுதலைப் புலிகள் ஊடுருவல் என்று அறிக்கை மேல் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கும் வெத்து வேட்டு காங்கிரஸ் கட்சியும் அதன் அனாமத்துக்களும் பாப்பாத்தியின் மோசடிக் கட்சியும் ஜால்ராக்களான சோ இந்து ராம் போன்ற பிரகிருதிகளும் மணலைக்கயிறாகத் திரித்து பாலை மோராக்கி விடுதலைப்புலிகளால் ஆபத்து என்று கூவோகூவென்று கூவியிருப்பார்கள்.
அரசியலில் செய்வதற்கே 17 வருடங்களுக்கு முன்னர் செத்துப்போன இராஜீவையும் விடுதலைப்புலிகளையும் நம்பிக்கொண்டிருக்கும் காங்கிரஸ் வெத்து வேட்டுகளுக்கு , இந்தப்பட்டியலில் அத்வானியையும் நரேந்திர மோடியையும் இணைத்துக் கொண்டது பற்றி மத்திய புலனாய்வுத்துறை மேல் அவ்வளவு மகிழ்ச்சி இருந்திருக்க முடியாது.
சோனியாவின் பெயரை மட்டும் சுட்டிக்காட்டியிருந்தால் அன்னை சோனியாவைக் காப்பதற்கென்று முள்ளுக்குத்தி காவடி எடுத்து ஒரு பிரளயமே பண்ணியிருப்பார்கள். பாப்பாத்தியும் தன் பங்கிற்கு அறிக்கை மேல் அறிக்கை விட்டு தன் "பவரை"க்காட்டியிருப்பார்.
மு.கவும் தன் குமாரத்தி கனிமொழியை டெல்கிக்கு அனுப்பி தன் விசுவாசத்தைக்காட்டியிருப்பார். விசுவாசத்திற்கு நன்றியாக எலும்புத்துண்டு அமைச்சர் பதவி கனிமொழிக்குக் கிடைத்திருக்கும்.
எல்லாவற்றையும் போட்டுடைத்த உளவுத் துறை மேல் எல்லோருக்கும் கோபம் நிச்சயமாக இருக்கும். பார்ப்பனப் பத்திரிகைகளுக்கும் மெல்லுவதற்கு அவல் கிடைக்கவில்லை.
இருந்தாலும் இந்த கொள்ளையர் கூட்டத்தை எப்போதும் நம்ப முடியாது. கடுகை மலையாக்கி மலையை மத்தாக்கி எது வேண்டுமானாலும் செய்து விடுவார்கள்.
அதற்கு முன்னால் ஒரு பதிப்பைப்போட்டு வைத்தால் நாம் அப்போதே சொன்னோமே என்று மார்தட்ட வசதியாக இருக்குமல்லவா?
இந்தியா அறிவிப்பு என்பதெல்லாம் ரீலா..? என்று கேட்பது புரிகின்றது. ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் அல்லவா..?
அது தாங்க ஒரு பத்திரிகை உண்மையை மறைக்க முடியாது செய்தி வெளியிட்டிருக்கின்றதே..?
காந்தியின் அகிம்சை தேசத்துக்கு, சத்திய சோதனைக்கு இது ஒன்று போதாதா ...என்ன?
Thursday, February 07, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment