Monday, February 04, 2008

புலிகளுக்கு ஆதரவென வீண்பழி - கருணாநிதி அலறல்

உலகத்தமிழினத் தலைவரின் வாக்குமூலம் இது. உலகத்தமிழினத்தின் ஏகோபித்த தலைவன் என்று தனக்குத்தானே மகுடம் சூட்டிக் கொண்ட தமிழினத்தலைவரின் சுய நலத்தின் வெளிப்பாடு இது.

தமிழன் எக்கேடு கெட்டால் என்ன தானும் தன் குடும்பமும் அனுபவிக்கும் ஏகபோக ஆட்சியதிகாரமும் சொத்துச் சுகமும் பறிபோய் விடக்கூடாதே என்று பார்ப்பனக்கட்சி காங்கிரசின் தலைவிசோனியாவின் முன்னால் படித்த கெஞ்சல் கடிதம் இது.

"தம்பி தமிழ்ச் செல்வா எங்கே சென்றாய்..?" என்று கவிதை படித்து மீண்டும் உலகத் தமிழின தலைவனாக போட்ட குத்துக்கரணம் சபைக்குதவாது என்பதை தெளிவாய்ப்புரிந்து கொண்டு தன் தமிழினக்காவலன் வேடத்தைக் கலைத்து சோனியாவின் கால்களில் விழுந்து இறக்கும் வரை பதவிக்கட்டிலைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கும் உண்மை முகம் இதுதான்.

அது எத்தனை கோரமாக அசிங்கமாக இருந்தாலும் இது தான் உண்மை முகம்.

'ஐயோ ஐயோ .. நான் எதுவும் செய்யவில்லையே எல்லாம் எம்.ஜி.ஆர் தான் என்று உண்மையை உண்மையாய் ஒப்புக்கொண்ட ஒப்புதல் வாக்கு மூலம்.

. http://www.thinakkural.com/news/2008/2/4/importantnews_page45275.htm

//விடுதலைப் புலிகளை ஆதரிப்பதாக தங்கள் மீது வீண்பழி சுமத்தி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினால் அந்த ஆட்சிமாற்றத்தை சந்திக்க தாம் தயாராகவிருப்பதாகத் தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி, தமிழகம் புலிகளின் வேட்டைக் காடாகிவிட்டதாக காங்கிரஸார் பொய் பிரசாரம் செய்வதாகவும் குற்றம் சாட்டினார்

ஏதோ,தமிழ்நாடு புலிகளின் வேட்டைக்காடாகிவிட்டதுபோல் காங்கிரஸ் கட்சியினர் பேசிவருகின்றனர். கிருஷ்ணசாமி, அமைச்சர் சிதம்பரம் போன்றோர் எம்மீது வீண் பழி சுமத்துகின்றனர்.

தமிழ்நாட்டில் யார் தேச விரோதமாக ஈடுபட்டாலும் சரி சட்ட விரோத காரியங்களில் ஈடுபட்டாலும் சரி அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
அந்த சட்ட நடவடிக்கைகளுக்கு அவர்கள் உள்ளாவார்கள் என்று சட்டசபையிலேயே அறிவித்தேன். அதை சட்டமாக்குவோம்.


விடுதலைப்புலிகளுக்கு கருணாநிதி இங்கு இடம் கொடுத்து விட்டார் எனக் கூறுகிறார்களே. இதை நினைக்கும்போதுதான் மிகவும் வருத்தமாக உளளது. விடுதலைப்புலிகளை ஆதரித்ததில் எம்.ஜி.ஆரா,கருணாநிதியா என்பதற்கு எம்.ஜி.ஆருக்கு நிகர் இதில் யாரும் கிடையாது.

கடந்த ஓர் ஆண்டு காலத்தில் தி.மு.க.அரசு பதவிக்கு வந்ததில் இருந்து இது வரையில் விடுதலைப் புலிகளுக்காக போல்ரஸ் குண்டுகள் அலுமினிய கட்டிகள், வெடி பொருட்கள் கடத்தியதாக கடந்த 15-5-2006 முதல் 30-1-2008 வரை பதிவு செய்யப்பட்ட வழக்கு 12. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் 103 பேர். இதில் விடுதலைப் புலிகள் 13 பேர் ஆவர். இவ்வாறு அறிவித்துவிட்டு கைதான விடுதலைப் புலிகளின் பெயர் விவரங்களை வாசித்தார்.
இது மட்டுமல்ல விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் 92 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் இலங்கை தமிழர்கள் 31 பேர். இந்திய தமிழர்கள் 61 பேர்.
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் 40 பேர் சிறையில் உள்ளனர். இதில் 3 பேர் விடுதலைப் புலிகள். எனவே இந்த கணக்கு எங்களிடம் உள்ளது. இது மத்தியில் உள்ள உளவுத் துறைக்கு தெரியாமல் இருக்காது. அதுவும் நிதி அமைச்சர் பொறுப்பில் உள்ள ப.சிதம்பரத்துக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை.
ஏதோ தமிழ்நாடு விடுதலைப் புலிகளின் வேட்டைக் காடாக ஆகி விட்டது என்ற உணர்வில் காங்கிரஸாரும் பேசுகிறார்கள். இதற்காக வருத்தப்படுகிறேன்.

இது போன்ற சூழ்நிலை ஏற்பட்டால் அதை தடுத்து நிறுத்த முதலில் நிற்பது நான்தான். காங்கிரஸ் மட்டு மல்ல தி.மு.க, பா.ம.க, திராவிடர் கழகம் ஆகியோருக்கும் அந்த பொறுப்பு உண்டு. யார்-யார் தி.மு.க. தோழமை கட்சியாக உள்ளார்களோ அவர்களுக்கும் இந்த பொறுப்பு உண்டு. இவர்கள் கூட்டணியில் இருந்து கொண்டு தான் பேசுகிறார்களா? என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விடுதலை சிறுத்தைகளுக்கும் அந்த பொறுப்பு இருப்பதாக கருதுகிறேன்.
எனவே, எங்கள் மீது இப்படி ஒரு பழியை போட்டுத்தான் ஆட்சி வரும் என்றால் அந்த ஆட்சி மாற்றத்தை சந்திக்க தயார். எங்கள் மீது வீண் பழி சுமத்தாதீர்கள். இது நாட்டுக்கு நல்லதல்ல. தமிழக மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள். அவர்களிடம் எந்த சஞ்சலத்தையும் உண்டாக்க வேண்டாம்//


தமிழனுக்கு தாங்கள் எதிரிகள் என்று சொல்லிக்கொண்டே கொடுவினை செய்யும் பாப்பாத்திக் கட்சியோ உதிரிகளான சோ, இந்து ராம் இவர்களையும் விட தமிழ் மக்களின் நெஞ்சை எட்டி உதைத்து வேதனையை ஏற்படுத்துபவர்கள் இப்படிப்பட்டவர்கள் தான்.உயிருக்கு உத்தரவாதம் இன்றி துன்பத்திலும் துயரத்திலும் அல்லல் படும் மக்களின் சாபம் இவர்களையெல்லாம் நன்றாக வாழவிடாது. கொடுங்கோன்மையின் கொடூரத்தின் பல்லிலும் நகங்களிலும் கிழிபட்டு சிதைந்து கொண்டிருக்கும் ஒரு இனத்தின் சாபத்திற்கு ஒரு வலு இருக்கும். அது இவர்கள் மீது பாயாதிருக்க ஆண்டவன் இவர்களைக் காப்பாற்றட்டும்

2 comments:

இட்டாலி வடை said...

stan11:23 pm "புலிகளுக்கு ஆதரவென வீண்பழி - கருணாநிதி அலறல்":

First of all try to understand that as far as Tamil people on India, LTTE is seperate terrorist group, eelam tamil people are seperate peace loving people. Kaiaigar supports eelam people and not LTTE. LTTE is a terrorist group they have already done enough damage in India and Tamilnadu, enough of them.

இட்டாலி வடை said...

LTTE இல்லாது ஈழத்துத் தமிழ் மக்கள் இல்லை என்ற அடிப்படை விடயத்தையே நீங்கள் புரிந்து கொள்ளவில்லை.

LTTE பற்றி அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்களான ஒபாமாவும் கிலாரி கிளிண்டனும் சொன்னதையும் ஒரு முறை நினைத்துப் பாருங்கள்.

வி.புலிகள் ஒரு இன விடுதலைப்போராட்ட அமைப்பு என்பது நீங்கள் ஒத்துக் கொண்டாலும் ஒத்துக் கொள்ளாவிட்டாலும் உண்மையே.

இந்தியாவிற்கு ஏற்பட்ட இழப்பு என்று நீங்கள் கருதுவது அமைதிப்படை என்ற பெயரில் வந்து அராஜகம் செய்தவர்களை அடித்து விரட்டியது தானே.

அத்தனை துயரத்துக்கும் காரணமான ஒருவரைக் கொன்று போட்டார்கள். அதுதானே... நீங்கள் எங்கள் மண்ணிற்கு வரும் வரை உங்களை யாரும் ஒன்றும் செய்யவில்லையே .... உங்கள் ஊரில் வந்து குண்டு வைத்தோமா..கட்டடங்களை உடைத்துப்போட்டோமா?

மிகப்பெரிய தவறு உங்களைத் தொப்பூள் கொடி உறவென்று நம்பி அகதிகளாக ஓடிவருவது. அப்பாவி ஜனங்கள் இன்னும் இந்தியாவை நம்பிக்கொண்டிருக்கின்றார்கள்.

இந்தியாவின் வல்லரசு ஆகும் கனவு புரிந்தவர்களுக்கு இதுவொன்றும் ஆச்சரியம் இல்லை. எங்களில் பலர் புரிந்திருக்கின்றார்கள் சிலர் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றார்கள்.