- தமிழ் மணத்தின் நோக்கம் அது ஆற்றிவரும் சேவை என்பது பற்றி எந்தக் கேள்வியும் இல்லை. அது மேலானது ,சிறப்பானது
- தமிழ் மணம் எதுவித தன்னிலை விளக்கத்தையும் அளிக்காத நிலையில் அவர்கள்ளுடைய நிருவாக விடயங்களில் தலையிடும் உரிமையும் நோக்கமும் எமக்கில்லை.
ஆனால் இங்கு தமிழ் மணம் நிருவாகம் கடந்த சில நாட்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் "புரட்சி/எதிர்ப்புரட்சி வாதங்கள் பற்றி கருத்து சொல்ல முற்பட்டதன் பின்னர் எமது சந்தேகங்களை தெளிபு படுத்தும் நோக்கில் இங்கு சில கேள்விகளை முன் வைக்கின்றோம்.
இது தமிழ் மணம் பதிவில் தமிழ் மணம் நிருவாகத்தால் வைக்கப்பட்ட தன்னிலை விளக்கமும் அதற்கு நம் பதிவுலக நண்பர்கள் அளித்த கருத்துகள்/விளக்கங்கள். சிவப்பில் குறிக்கப்பட்டவை தமிழ் மணம் நிருவாகத்தின் கருத்துகள்/விளக்கங்கள் என்பதை உங்களுக்கு கூறிக்கொள்ள விழைகின்றேன்:
பதிவர்களுக்கு,கடந்த சில நாட்களாகச் சில பதிவர்கள் ஒரு பகுதி வாசகர்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்தோடு பலரை முகம் சுளிக்க வைக்கும் இடுகைகளைத் தமிழ்மணத்தில் இணைத்து வருவதைப் பல பதிவர்களும், வாசகர்களும் எமக்குத் தெரியபடுத்தி வருகிறார்கள். பதிவர்களின் கருத்துரிமையில் தலையிடும் நோக்கம் தமிழ்மணம் நிர்வாகத்திற்கு இல்லையெனினும், இப்போக்கால் பெருவாரியான பதிவர்கள், வாசகர்கள் தமிழ்மணத்தின் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதைக் கருத்தில் கொண்டு இத்தகைய, வெறும் பரபரப்பு மதிப்பிற்காக எழுதப்படும் இடுகைகளைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இது மேலும் தொடருமானால் பெருவாரியான பதிவர்கள்/வாசகர்களின் தேவைகள், ஆர்வங்கள் ஆகியவற்றைக் கருதி அத்தகைய இடுகைகள் நீக்கப்படும் அல்லது பதிவுகளைத் திரட்டுவது தற்காலிகமாக நிறுத்தப்படும் என்பதை அறியத்தருகிறோம்.பதிவர்களின் புரிந்துணர்விற்கும், தொடர்ந்த ஆதரவிற்கும் நன்றி.
தமிழ்மணம் நிர்வாகம்
லக்கிலுக்January 31st, 2008 11:55 pm
நல்ல முடிவுக்கு நன்றி!
முடிந்தால் சூடான இடுகைகள் என்ற ஒரு பகுதியையே தூக்கிவிடவும். அப்பகுதியில் இடம் பெறுவதற்காக நடக்கும் கோமாளிக் கூத்துக்கள் காண சகிக்கவில்லை.
கானல்மனிதன்
February 1st, 2008 12:04 am
நல்ல முடிவு. வெளிநாட்டில் இருக்கும் நாங்கள் எங்களது குடும்பத்தினருக்குக் கூட தமிழ் ஆர்வத்தைத் தூண்ட தமிழ்மணத்தைச் சிபாரிசு செய்தோம். இப்போது இது போன்ற இடுகைகள் எங்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்துகின்றன
Osai Chella
February 1st, 2008 1:14 am தமிழ்மணம் என்னும் இணைய மீடியா மீது என்ன கோபமோ தெரியவெல்லை! அவர்களின் வேண்டுகோளே போதுமானது… அப்பகுதியையே தூக்குவது என்பது மூட்டைப்பூச்சிக்காக வீட்டைக்கொழுத்துவது போல என்று கூறி அமைகிறேன்
வளர்மதி
February 1st, 2008 1:51 am
நன்று.
சில நாட்களாக தமிழ் மணம் பக்கம் வரவே தயக்கமாகவும் சில நேரங்களில் அருவருப்பாகவும் இருந்தது. எட்டிப் பார்த்து ஓடிவிடும் நிலைமை
உண்மைத்தமிழன்
February 1st, 2008 7:29 am
இது மாதிரி எச்சரிக்கை விடுப்பதற்கு இங்கே எழுதுபவர்கள் பள்ளி மாணவர்களா என்ன..?
சஞ்சய்
February 1st, 2008 8:18 am
நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ்மணம் பக்கம் வந்தேன். ஒரே மஞ்சள் வாடை. நான் உண்மை தமிழனை வழிமொழிகிறேன்
thamizachi
February 1st, 2008 10:29 am
நீங்கள் குறிப்பிட்டுள்ள பதிவர்களில் நானும் அடக்கம் என்பது தெரியும். ஆனால் நீங்கள் சொல்வது போல் வாசகர்களை ஈர்ப்பதற்காகவோ, சூடான இடுகையில் இடம் பெற வேண்டும் என்பதற்காகவோநான் பதிவுகள் எழுதவில்லை என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். யோனி என்பது ஆபாச வார்த்தையா
Periyaarthasan
February 1st, 2008 11:47 am
மிக நல்ல முடிவு. தமிழ்மணத்தில் ஒரு சில விளம்பரப்பிரியர்களின் அருவருப்பான எழுத்துக்கள் தமிழ்மணத்தின் நோக்கத்தையே திசைதிருப்பிக் கொண்டிருந்தது. பண்பாடுள்ள பெண் பதிவாளர்கள் தமிழ்மணப்பக்கமே காணாம்ல் போய்விட்டார்கள். கருத்துச் சுதந்திரம் என்பது மஞ்சள் பத்திரிகை, நீலப்படம் தயாரிப்பது அல்ல. உங்கள் முடிவுக்கு நன்றி
சாய் ராம்
February 1st, 2008 1:45 pm
இணையம் என்பது கருத்துரிமைக்காக!அந்த கருத்து பெரும்பான்மையானாரை பாதிக்கிறது என்பது தான் ஆண்டாண்டு காலமாய் மற்ற ஊடகங்களின் justificationயாக இருந்திருக்கிறது!அதனை தாண்டி ஒவ்வொருக்கும் இடம் பெற்று தந்ததை தான் இணையத்தின் முக்கியமாக வலைத்தளத்தின் புரட்சி என்பதை சுட்டி காட்டுகிறேன்.
ரவுசு
February 1st, 2008 2:57 pm
இந்த வரை முறை தாண்டிய பதிவுகள் பற்றி கேலி செய்து எழுதிய காரணத்தாலோ என்னவோ எம் வலைப்பதிவை தமிழ் மணம் நிர்வாகம் இன்னும் அனுமதிக்கவில்லை.
நேரிடையாக சமூக பண்பாட்டு விழுமியங்களை கருத்தில் கொள்ளாத மனவக்கிரங்களுடன் கூடிய சில பதிவர்களின் அனைத்துக் கட்டு மீறல்களையும் அனுமதித்துக் கொள்ளும் தமிழ் மணம் எவ்வகையான அளவீட்டைக் கொண்டுள்ளது என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
தமிழ்மணம்
February 1st, 2008 4:08 pm
பதிவர்களின் கருத்து வெளியீட்டுரிமை எவ்வளவு முக்கியமோ அவ்வளவிற்கு வாசகர்களின் வாசிப்புரிமையும் முக்கியம் என தமிழ்மணம் நம்புகிறது.
“பதிவர்களின் கருத்து வெளியீட்டுரிமை எவ்வளவு முக்கியமோ அவ்வளவிற்கு வாசகர்களின் வாசிப்புரிமையும் முக்கியம் என தமிழ்மணம் நம்புகிறது. பதிவர்களும், வாசகர்களும் கருத்துப் பகிர்வுக்கும், கருத்து அறிதலுக்கும் தமிழ்மணத்தை பரவலாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்பதே எங்கள் நோக்கம்” என்ற உங்களது வாதம் நியாயமானது. .
தமிழ்மணம் நிர்வாகம்
thamizachi
February 1st, 2008 6:12 pm
“பதிவர்களின் கருத்து வெளியீட்டுரிமை எவ்வளவு முக்கியமோ அவ்வளவிற்கு வாசகர்களின் வாசிப்புரிமையும் முக்கியம் என தமிழ்மணம் நம்புகிறது. பதிவர்களும், வாசகர்களும் கருத்துப் பகிர்வுக்கும், கருத்து அறிதலுக்கும் தமிழ்மணத்தை பரவலாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்பதே எங்கள் நோக்கம்” என்ற உங்களது வாதம் நியாயமானது.
இவை நேயர்களின் கருத்துக்கள். இனி தமிழ்மணம் நிருவாகத்தின் கருத்தை கூர்ந்து கவனியுங்கள்.
////பதிவர்களும், வாசகர்களும் கருத்துப் பகிர்வுக்கும், கருத்து அறிதலுக்கும் தமிழ்மணத்தை பரவலாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்பதே எங்கள் நோக்கம்.///
இங்கு தான் எமது முதலாவது சந்தேகம் எழுகின்றது. இத்தகைய உயரிய நோக்கம் கொண்ட தமிழ் மணத்தில் சேர்க்கைக்கு இடப்ப்பட்டும் பல பதிவுகள் சேர்க்கைக்கு எடுத்துக் கொள்ளப்படாமலேயே இழுத்தடிக்கப்படுவது ஏன்?
சேர்க்கைக்கு இடப்பட்டபின் இவ்வாறு ஒரு அறிவித்தல் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
மதிப்பிற்குரியxxxxx உங்கள் வலைப்பதிவை தமிழ்மணம் பட்டியலில் சேர்க்கைக்கு அளித்தமைக்கு நன்றிஉங்கள் அளிப்பு பரிசீலிக்கப்பட்டு 24 மணி நேரத்துக்குள் செயல்படுத்தப் படும். காத்திருப்பில் உள்ள பதிவுகளின் பட்டியலை அறிந்துகொள்ள இங்கே செல்லவும்: http://www.thamizmanam.com/user_blog_status.php
சேர்க்கை பற்றி முடிவு எடுக்கப்பட்டவுடன், உங்களுக்கு மின்னஞ்சலில் அறிவிக்கப்படும்.
சேர்க்கை சம்பந்தப்பட்ட கேள்விகளை
listadmin@thamizmanam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். இனிமையான வலைப்பதிவு அனுபவத்துக்கு வாழ்த்துக்கள்!-பதிவுகள் நிர்வாகி,இக்கடிதம் கிடைத்து 24 மணித்தியாலங்களில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும். ஆனால் பலருக்கு எப்படியோ எமக்கு/சிலருக்கு பலநாட்கள் போயும் இணைத்துக்கொள்ளப்படவுமில்லை/காரணம் கூறிப்பதிலுமில்லை.
இதுவரை பதிலுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் பதிவுகள்:
சேர்க்கையளிப்பு நிலவரப் பட்டியல்
பதிவின் தலைப்பு
வலைப்பதிவர்
அளிக்கப்பட்ட தேதி
கருப்பொருள்
thamizmaNam : Tamil Blogs Aggregator
மா சிவகுமார்
03-02-2008
தமிழ்மணம்.காம் திரட்டிய சமீபத்திய 25 இடுகைகள்தலைப்பு:அரசியல்/சமூகம்
தேவை ஒரு விவசாயப் புரட்சி !!!
செல்லம்மாள்
02-02-2008
??? ???????
S ?????? ??????? ????????
01-02-2008
துர்க்கை
ரவுசு
31-01-2008
Kitchen Recipies - Become an Expert Bawarchi
Kanchana Radhakrishnan
31-01-2008
வயல் வெளி
முரளி
29-01-2008
எனது உலகம்
Tamil
25-01-2008
கீழக்கரையிலிருந்து
கீழக்கரையிலிருந்து
25-01-2008
ஸனாதன தர்மம்
சப்தரிஷி
25-01-2008
கிறிஸ்துநேசன்
christhunesan
24-01-2008
இயேசு கிறிஸ்து மெய்யான தேவன்,உலக இரட்சகர்
மைகோவை
23-01-2008
அரட்டை கச்சேரி
arattaikatcheri
16-08-2007
அரட்டை அடித்து வாழ்வாரே வாழ்வர் மற்றையர் எல்லாம் மொக்கை போட்டே சாவார்..
எம்மால் அனுப்பப்பட்ட கடிதத்திற்கும் இதுவரை எந்தப்பதிலும் இல்லை. இது வரை எம்மால் 3 நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது.
அன்புள்ள் தமிழ் மணம் நிருவாகத்திற்கு !
எமது வலைப்பதிவாகிய "xxxx" தமிழ் மணம் சேர்ப்பிற்கு அனுப்பப்பட்டு உங்கள் காலக்கெடுவான 24 மணித்தியாலங்கள் கடந்தும் இதுவரை தமிழ் மணத்தில் பட்டியலிடப் படவில்லை.
இவ்விடயம் குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மிக விநயத்துடன் வேண்டுகின்றோம்.
இவ்வண்
xxxxx பதிவாளர்கள்
///தமிழ்மணம் ஒரு பொதுவெளி என்ற அளவில் இவ்விரண்டுக்குமான சமநிலையைப் பேணும் வகையில் பதிவர்களும், வாசகர்களும் ஒத்துழைக்க வேண்டுமென்பதே எங்கள் கோரிக்கை. அதற்கான விவாதம் தொடரும் வகையில் இந்த இடுகைக்கு அனுப்பப்படும் பின்னூட்டங்கள் (தனிநபர்களைத் தீவிரமாக தாக்காத வரையில்) அனுமதிக்கப்படும்.///
பின்னூட்டங்களில் "பொறுக்கி என்று பதிபவர்களை எல்லாம் தமிழ் மணம் விட்டு வைத்திருக்கின்றது.
உதாரணம்:
"Thamizachi said...//ரவுசு said... //பொறுக்கி ரவுசு விடும் வேலையெல்லாம் வேறு யாரிடாவது வைத்துக் கொள்.2 February, 2008 7:57 PM
எங்களுடைய கேள்வியெல்லாம் தமிழ் மணம் இந்த விவகாரங்களில் எவ்வாறு நடந்து கொள்ளப்போகின்றது ?
சக பதிவர்களே ! உங்கள் கருத்து எவ்வாறு இருக்கின்றது?
தமிழ்மணம் ஜனநாயக நடை முறைகளைக் கடைப்பிடிக்கின்றதா?
6 comments:
யோவ் ரெண்ண்டு நாளா உன் பதிவு தமிழ் மணத்துல வந்துகிட்டுத்தான் இருக்கு கவனிக்கலியா நீ?
வாருமையா அனானிமஸ்!
தொடுப்புக்கிடைக்காத லிஸ்டு கொடுத்திருக்கேனே ..அங்க பாக்கலியா.. நம்ம பதிவு ஒன்னு மாட்டிக்கிட்டு அல்லாடுதப்பா...
நமக்கு மட்டும்னு கெடையாது பொது நோக்கம் கருதியும் தான்..பொறுக்கி பேமானின்னு //கருத்து// பதியும் கைகளை வெட்டவும் தான்...
வெளங்குதா..?
ரவுசு,
தமிழ்மணத்திலே சேர்க்க விண்ணப்பிக்கும்போது, தமிழ்மணத்துக்கு பதிவு விபரம் வந்து சேர்ந்ததென்று பதிவருக்கு அறியத்தருவதற்காக வரும் தானியங்கு மின்னஞ்சலிலே நீங்கள் சொன்ன 24 மணிநேரக்கெடு இருக்கின்றதா? தமிழ்மணத்திலே சேர்க்க பொதுவாக இரண்டு தொடக்கம் ஐந்து நாட்கள் எடுத்துக்கொள்வதுதான் வழக்கமாகத் தெரிகிறது.
மேலும், சென்ற ஆண்டு, அநாமதேயப்பதிவர்களாக "அன்பான முதல் மூன்று ஆழமான இடுகைகளுடன் சேர்ந்து கொள்கின்றவர்கள்" தமிழ்மணத்திலே இணைத்தபின்னால், "அழகான தமிழிலே சரமாரியாகப் பொழிந்து" விட்டுப்போகிற அவலத்தினை தமிழ்மணத்தினூடாக பதிவுகளை வாசிக்கும் எல்லோரும் கண்டிருக்கிறோம். அதனாலேயே, சில பதிவுகளின் தன்மையைப் பொறுத்து, இரு வாரங்களுக்கு அப்பதிவுகள் எப்படியாகப் பதியப்படுகின்றன என்று தொடர்ச்சியாகக் காணப்பட்டு, அன்பாக முளையெடுத்து, அவதூறுகளாக முழுமையடையும் பதிவுகள் களையெடுக்கப்பட்டுச் சேர்க்கப்படாமலே தவிர்க்கப்படுகின்றன. இது பற்றி, தமிழ்மணம், தமிழ்மணம் அறிவிப்பு பதிவிலும் சென்ற ஆண்டு அறிவித்திருந்தது. யோனி என்ற வார்த்தைக்கு அலறும் பண்பாட்டுப்பதிவர்களோ (சமச்கிருதத்து யோனிக்கு அல்குல் என்ற தமிழ்வார்தை மேலில்லையா?), ஆணாதிக்கத்து/பழமைவாதத்துத் தமிழ்மணம் யோனி என்ற வார்த்தைக்கே சுருங்கிக்கொள்கின்றதென்ற புரட்சிப்பதிவார்களோ தமிழ்மணத்தினை வாராந்திர அளவுக்கதிகமாக வாராதிருக்க வேண்டுமானால், இப்படியான சில நடைமுறைச்செயற்பாடுகளைச் செய்யவேண்டிய நிலைதான் தமிழ்மணத்துக்கு இருக்குமென்று தோன்றுகின்றது.
அதை விடுங்கள்; தமிழ்மணம் அஃறிணை இணையத்திரட்டி; பாலிலி. அதற்கு அல்குல், ஆண்குறி எல்லாம் தெரியாது.
தமிழ்மணத்துக்கு தானியங்கியாக ஒரு பல்கலைக்கழகத்தின் பண்பாட்டெல்லைக்கு ஒவ்விய பதிவுகளை அனுமதிக்கவென்றோ (Liberty university Vs. UC-Berkeley என்ற பண்பாட்டெல்லை வாதம் கிளம்பாதிருந்தாலே சரி), பச்சைக்குழந்தையும் சப்பக்கூடிய பதிவுகளை அனுமதிக்கவென்றோ தெரியும் தொழில்நுட்பம் தெரியாது. "துப்பாக்கிகள் கொல்வதில்லை; துப்பாக்கியவான்களே கொல்கிறார்கள்."
கடைசியாக, நீங்கள் நல்லவரா? கெட்டவரா?
வாருங்கள் பெயரிலி !
இத்தனை அழகாக விளக்கம் கிடைத்திருந்தால் இந்தப் பதிவ்விற்கே தேவை இருந்திருக்காது.
நினைவூட்டல் கடிதங்களுக்கும் பதிலில்லை என்றவுடன் நடைமுறை பற்றி சந்தேகம் வந்து விட்டது...
தனி மனித தாக்குதல்கள் ( கருத்து முரண்பாடுகளைக் குறிப்பிடவில்லை) பொறுக்கி பேமானி என்று சிலர் இன்னும் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்.
அவர்களை உற்சாகப்படுத்தும் விதாமாக யாரும் நடந்து கொள்ளக் கூடாது என்பதும் இப்பதிவின் நோக்கம்..
நல்லதும் கெட்டதும் ஒரு புள்ளியில் தான் மாறுகின்றது. யாரும் பொறுக்கி என்று வார்த்தைகளை திருப்பிக் கொட்ட அதிக நேரம் எடுக்காது.
//கடைசியாக, நீங்கள் நல்லவரா? கெட்டவரா?//
இது ஒரு நல்ல கேள்வி : நன்மையும் தீமையும் கலந்து தான் மனிதன் வாழுகின்றான். அரைப்பகுதிக்கு மேலாக நல்ல தன்மையிருந்து விட்டால் நல்லவனாகவும் (விகிதாசாரத்தில்) கெட்ட தன்மை இருந்து விட்டால் கெட்டவ்வனாகவும் பார்க்கின்றோம்.
"அவன் நல்லவன் தான் ஆனால்.. இப்போது ஏன் இப்படியென்ர்று தெரியவில்லை... " என்று கதைப்பதெல்லாம் இதனால் தான்.
ஆகவே நல்லவன் கெட்டவன் என்பதை மற்றவர்கள் தான் சொல்லவேண்டும்.
தன்னைப் பற்றிய தனது கணிப்பு எப்போதும் சரியானதென்றோ சரியாகத்தான் இருக்கவேண்டுமென்றோ யாரும் எதிர்பார்க்க முடியாது.
நல்லவன் என்ற பெயர் எடுத்தவனுக்குள்ளேயே எத்தனையோ கெட்ட குணங்கள் இருப்பதை அவன் மனச்சாட்சியே அறியும்.
ஆகவே என்னைப்பற்றி நீங்கள் சொல்ல வேண்டும். உங்களைப்பற்றி நான் சொல்லவேண்டும்.
அது தான் சரியான கணிப்பு. இப்பவே கண்ணைக்கட்டுதா?
கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் நடைபெறும் வம்பு வளர்த்தலுக்கு தமிழ்மணம் துணைபோகின்றது. தமிழச்சி பெண்ணியம் என்ற போர்வையில் எழுதிவரும் குப்பைகளை எத்தனை பேர் ஆதரிக்கின்றார்கள்? விளம்பரம் வேண்டுமானால் அரைகுறை உடைகளுடன் ஸ்ராயோ போன்று ஒரு போஸ் கொடுக்கலாம். தமிழ்மணம் தூங்குகின்றதா அல்லது ரசிக்கின்றதா?. அல்லது ஆள் சேர்க்கின்றதா?.
நானும் ஒரு பெண்
Post a Comment