"First of all try to understand that as far as Tamil people on India, LTTE is seperate terrorist group, eelam tamil people are seperate peace loving people. Kaiaigar supports eelam people and not LTTE. LTTE is a terrorist group they have already done enough damage in India and Tamilnadu, enough of them"
Stan என்ற சக பதிவர் எனது முந்தைய பதிவொன்றிற்கு எழுதிய கருத்து/ஆதங்கம் இது. ஓரளவில் இது இப்போதைய தமிழ் நாட்டு மக்களின் எண்ணப்பாடாகவும் இருக்கலாம். ஆனால் எந்த அடிப்படைக் காரணங்கள் அவர்களை இந்த முடிவிற்கு கொண்டு வந்திருக்கக் கூடும் என்ற ஆதங்கம் எங்களிற்கு நிறையவே உண்டு. முதன்மைக்காரணிகளாக,
1. தங்கள் பதவி ஆசையின் நிமித்தம் ஈழத்துப்போரை பகடைக்காய்களாக மாற்றிக் கொள்ள விழைகின்ற தமிழ் நாட்டு அரசியல் வாதிகள்.
2.அகண்ட பாரத/வல்லாதிக்க கனவினை நெஞ்சில் சுமந்து கொண்டு செயற்படும் கொள்கைவகுப்பாளர்கள், அதிகாரிகள்.
3.அதனைச் செயற்படுத்த தகிடு தத்தங்களைச் செய்யும் உளவு அமைப்புக்கள்.
4. அவற்றின் ஊது குழலாகச் செயற்பட்டு நடை முறைகளையும் செயல்களையும் திரித்துப் பிரச்சாரப்படுத்தும் (பார்ப்பனப்) பத்திரிகைகள்
ஈழத்துப் போரில் இந்தியாவின் தலையீடு ஆரம்ப காலங்களில் இருந்தே இயற்கையாகவே இருந்து வருகின்றது. இதை விளங்கிக் கொள்ள இந்தியா இலங்கை மாலைதீவுகளுக்கிடையே போடப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வந்த முக்கூட்டு ஒப்பந்தத்தை நாம் நினைவிற்குக் கொண்டு வரவேண்டும்.
இந்த ஒப்பந்தமானது இம் மூன்று நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு தொடர்பானதாகவும் அன்னிய சக்திகளின் தலையீட்டைத் தவிர்க்கும் தடையாகவும் இயங்கி வந்தது. இதில் இந்தியா தவிர்ந்த இரு நாடுகளும் இந்தியாவின் தயவில் இருக்க இந்தியாவே "அண்ணாச்சியாக" செயற்பட்டு வந்தது.
இதன் மூலம் இந்தியா தனது தெற்குப்பகுதிப் பாதுகாப்பை காபந்து செய்து கொண்டு வடக்கு, கிழக்கு, மேற்குப் பகுதிகளில் வரக்கூடிய பாது காப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வந்தது.
இலங்கை இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்திலேயே இலங்கையை இந்தியாவின் மாகாணங்களில் ஒன்றாக சுவீகரித்துக் கொள்ளும் எண்ணம் அப்போதைய ஆட்சியாளர்களிடம் இருந்தது. அவ்வெண்ணம் இப்போதும் முற்றாக அகன்று விடவில்லை.
இவ்வாறு தெற்குப்பகுதியில் பாதுகாப்பு நிலையாக இருக்கின்றது என்று நம்பிக்கொண்டிருந்த வேளையில் தான் 1977 களில் அமைந்த U N P கட்சியின் ஆட்சி அமெரிக்க சார்பு நிலையெடுத்தபோது இந்திரா அம்மையார் சிங்கள ஆட்சியை பயமுறுத்தும் ஒரு காரணியாக தமிழ்ப்போராளிக்குழுக்களை தமிழ் நாட்டிற்கு அழைத்து பயிற்சிகளையும் ஆயுதங்களையும் அள்ளிக் கொடுத்தார்.
அவரின் நோக்கம் ஓரளவு நிறைவேறும் தருணத்திலேயே அவர் கொல்லப்பட அடுத்து வந்த இராஜீவ் காந்தி அவசரக்குடுவையாக அநாமத்து இலங்கை இந்திய ஒப்பந்தத்தை - தமிழ்த்தரப்பின் எந்தவித ஒப்புதலோ ஆலோசனையோ பெறப்படாது விடுதலைப்புலிகளின் தலைவரை புதுடெல்கியில் காவலில் வைத்த படியே - கைச்சாத்திட்டது.
இதிலிருந்தே இவ்வகை ஒப்பந்தம் தமிழர் தரப்பு நிவாரணத்திற்கு வழிவகுக்கும் என்று பிரச்சாரங்கள் பலமாகச் செய்யப்பட்ட போதும் தன் பிடியிலிருந்து நழுவத்துடிக்கும் இலங்கையை கட்டிப்போட இந்தியா எடுத்த ஒரு நடவடிக்கை என்பது புலனாகும்.
இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்படும் வேளையில் இராஜீவ்விற்கு எழுந்த சந்தேகத்தை வெளியுறவுச் செயலராக இருந்த டிக்சிற் "அவர்கள் எங்கள் பையன்கள்..நாங்கள் சொன்னதைச் செய்வார்கள்...அவர்கள் பற்றி நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை .."என்று கூறிய கூற்றில் இருந்தே இந்தியாவின் தான் தோன்றித்தனமான செயல்களையும் ஈழத்தமிழ் இனத்தின் போராட்டத்தை துச்சமெனக் கருதிய தன்மையையும் விளங்கிக் கொள்ளலாம்.
இந்திய கொள்கை வகுப்பாளர்களின் எண்ணங்கள் தவிடு பொடியாகிப் போனதும் அதன் பின்னால் நிகழ்ந்த அனர்த்தங்களையும் எல்லோரும் அறிவார்கள்.
அமைதிப்படையால் வல்லுறவு கொள்ளப்பட்ட ஒரு பெண்ணே இராஜீவ்வின் கொலைக்கும் காலாக அமைந்தது நடந்தது.
இந்தியாவின் எண்ணம் இலங்கையில் தமிழர்களிடம் எடுபடாது போனமையே இந்தியாவின் தற்போதைய தமிழ் விரோதப் போக்கிற்குக் காரணமாகும். ஒரு வேளை தமிழ் ஈழம் என்று ஒன்று அமைந்து விட்டால் இந்திய எதிர்ப்புப் பாசறையில் இணைந்து விடுமோ என்ற சந்தேகமும் இந்தியாவைப் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கின்றது.
ஆனால் என்ன காரணத்தால் இந்தியா சிங்கள ஆட்சியாளர்களைத்தூக்கிப் பிடித்து ஆயுதங்களையும் ஆலோசனைகளையும் அல்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றதோ அக்காரணத்தைத் தவிடுபொடியாக்கும் வண்ணம் இலங்கை அமெரிக்க பாகிஸ்தானிய சக்திகளுடன் சாய்ந்து கொண்டிருப்பதையும் இந்தியா வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கின்றது.
இந்தியாவின் பலத்தையும் பலவீனத்தையும் நன்கு புரிந்து வைத்திருக்கின்ற இலங்கை நன்கு ஆட்டம் காட்டுகின்றது.
இந்தியாவுடன் மட்டும் உறவு வைத்துக்கொள்வது தன் இறைமையையே இழந்து இந்தியாவின் மானிலமாகும் அவலத்தை முன்னரே புரிந்து கொண்ட சிங்களமும் இந்தியாவின் எதிரிகளைத் தன் கொல்லையில் இறக்கி வைத்திருக்கின்றது.
இத்தனைக்குப் பிறகு இந்தியாவின் இராஜ தந்திரம் சறுக்கி விட்டது என்பதே ஆய்வாளர்களின் முடிவாகும். இந்தியா தன் பயங்காட்டலையும் பலங்காட்டலையும் இழந்து கெஞ்சும் நிலையிலேயே இருந்து கொண்டிருக்கின்றது. எப்படியாவது தன் ஆளுமையின் கீழ் இலங்கையைக் கொண்டு வரும் நோக்கம் மகிந்தவின் சர்வகட்சித்தெரிவுக் குழுவால் பிரேரிக்கப்பட்ட 13 ஆவது அரசியல் திருத்தச்சட்டத்துடன் கூடிய கண்துடைப்பு முறையை விழுந்தடித்து இந்தியா ஆதரித்ததில் இருந்தே அறியக் கூடியதாக உள்ளது.
எந்தவொரு நன்கு கவனித்துக் கொள்ளுங்கள் எந்தவொரு சர்வதேச நாடும் சமஷ்டி முறைமையைத் தவிர இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வதற்கு வழியில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே இந்தியாவின் பஞ்சாயத்து சபைகளுக்கு இருக்கக் கூடிய அதிகாரமும் இல்லாத இத் தெரிவை இந்தியா விழுந்தடித்து ஆதரிப்பதற்கு மேற்சொன்னவைகள் தவிர வேறு என்ன காரணங்கள் தேவை. (போலீஸ்,நிதி அனைத்தும் மத்தியில் இருக்கும் சுண்டைக்காய் தீர்வு)
இந்திய அரசினதும் கொள்கை வகுப்பாளர்களினதும் காரணங்களும் வாதங்களும் எதுவாக இருப்பினும் STAN போன்ற மக்களின் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதிலிறுக்க வருகின்றேன்.
சூளை மேட்டில் 80களில் நடந்த துப்பாக்கிச் சூடு தமிழ் நாட்டின் சட்டம் ஒழுங்கைச் சீரழிக்கின்றன என்ற வாதம்.
இந்திய அரசாங்கத்தின் ஆசீர்வாதத்தில் வகை தொகையின்றி தமிழ் நாட்டிற்கு வந்து சேர்ந்த ஈழது இளைஞ்ர்களின் "கெளபாய் " விளையாட்டு அது. ஒரு கையிலே துப்பாக்கி அரசின் அரவணைப்பு..சொல்லவா வேண்டும். அனுபவம் இல்லாத பையன்களின் வீரசாகசம். அதன் பின்னால் வந்த எதிர்ப்புக்களையும் வெறுப்புகளையும் பார்த்து தங்கள் நிலையையும் நோக்கத்தையும் புரிந்து கொண்டு அடங்கிவிட்டனர்.
இரஜீவ் காந்தியின் படுகொலை: அமைதிப்படையின் அட்டூழியத்தால் பிஞ்சு சிதறிப்போன மனங்களின் கோபம் அசூசை, இராஜ தந்திரத் தவறு எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
இதை இந்திய மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அவர்களுக்குத்தான் அதற்கான உரிமையும் தகுதியும் இருக்கின்றது. ஈழத்தவர்கள் யாரும் இதில் தலையிட முடியாது.
வேண்டுமானால் இந்திரா அம்மையாரைக் கொன்ற சீக்கியர்களை நீங்கள் மன்னிக்கவில்லையா என்பது போன்ற வேண்டுதல்களை வைக்கலாம். பழிக்குப் பழி என்று எங்களைத் தூர வைக்கலாமா? என்று இந்திய மக்களிடம் விண்ணப்பிக்கலாம்.
ஆனால் இதுவே பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் கலாச்சார உறவுகளுடன் இருக்கும் இருக்கும் தமிழ் மக்களைப் பிரித்து விடுமா? என்பதற்கான பதிலையும் அவர்களிடமே விட்டு விடுவோம்.
இன்னுமொரு கேள்வியும் இருக்கின்றது. துப்பாக்கிப் பிடியால் இராஜீவ் காந்தியை அடித்த சிங்களவர்களுடன் கூடிக்குலவுவதற்கு என்ன காரணங்கள் வைத்திருக்கின்றீர்கள்.
இந்தியாவின் வல்லாதிக்கக் கனவுகளைத் தவிர வேறு ஏதாவது விசேட காரணங்கள் இருக்கக் கூடுமோ..?
கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றது. பதில்கள் மக்கள் மனங்களில் இருந்து மனச்சாட்சியுடன் வெளிவர வேண்டும்.
LTTE டெரரிஸ்ட் அமைப்பு என்பது என்ன விதத்தில் நிரூபணம். அப்படியே நம்புபவர்கள் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஒபாமாவும் கிளாரி கிளிண்டனும் கூறிய கூற்றுக்களை ஒரு முறை மீளாய்வு செய்து பாருங்கள். அதே அமெரிக்காவே டெரரிஸ்ட் பட்டியலில் முதலில் சேர்த்தது. அவ்விடமிருந்தே இந்த மீளாய்வும் வருகின்றது.
இதே உலகம் தான் நெல்சன் மாண்டேலாவையும் அரபாத்தையும் தீவிரவாதி என்றும் பின்னர் விடுதலைப்போராட்ட வீரர்கள் என்றும் அங்கீகரித்தது. எதுவும் மாறலாம்.
Tuesday, February 05, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Thanks for posting my comments,
Your post explains the reasons for the interest of India towards eelam during Indira Gandhi period, whatever may be, but as a close friend of Rajiv's cabinet I know what were the thoughts of Rajiv on Srilanka and eelam. Rajiv would not have interfered in eelam problem if there would not have been increased number of 25000 refugees to India around 1985-86.
Rajiv Gandhi had great proposal for Srilankan Tamils. But everything was spoiled by LTTE and Jeyawardane.Rajiv had a deep interest in Tamil People dying in eelam. That's why the pact was formed. It was very clear route for Tamil people in eelam to get into democratic mode. But LTTE spoiled it. You said LTTE never agreed to the pact. But then why did Prabaharan announced in the public that he believe India and thats why he is giving back the arms.?. After telling this when LTTE realised that they did not have popular vote among Tamils they began to destroy the pact.Now Rajiv became scapegoat in the foil played between Jayawardane and LTTE.IPKF which was acting as a police force, forced to act as Military by LTTE because of its wrong doing, like killing the CM and doing all kinds of atrocities, Having been destroyed by IPKF, LTTE joined with Premadasa starts fighting with IPKF.
In this process some criminals in IPKF marred the image of IPKF by raping and killing innocent Tamils. IPKF has taken action against most of its soldiers by bringing them to Miltary court. But you know who became prey and scape goat in all these ?. The innocent Tamil people and Rajiv. Rajiv had alredy lost his life,
Tamil people are still loosing thier life. Tell me what is the best pact/agreement LTTE has got for Tamil people in all these 16 year which is better than Rajiv-Jeyawardane agreement. LTTE want to rule Tamils and they dont want any body else to exist so they will kill everybody. But peace forces should keep quiet Is it.?. They will bomb Army and run into hospitals, the army should keep quiet Is it.?. Its LTTE who spoiled the good solution that could have come to Tamil People. Tell me how Rajiv is responsible for some men in army killing tamil guys.You know how the fight started..
The reason for people start hating LTTE is from 1989 to 1991 the worst period in Tamil Nadu where LTTE after spoiling Tamils in eelam they started spoiling Tamils in TamilNadu where you will hear bombs and killings every where including cold blood murder of Padmanaba which ended up in killing our innocent Prime minister Rajiv. Now tell me how tamil people will support LTTE.
"இரஜீவ் காந்தியின் படுகொலை: அமைதிப்படையின் அட்டூழியத்தால் பிஞ்சு சிதறிப்போன மனங்களின் கோபம் அசூசை, இராஜ தந்திரத் தவறு எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்."
Sariyaan bhathil ithu...
Have read the complete article.
well written.The answers for all
the questions are honest..!
Post a Comment