இந்தியாவின் மேலிருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும்
இழக்கப்பட்ட சந்தர்ப்பம் இது.
ஆண்டன் பாலசிங்கம் லண்டன் பேட்டி
--டி.அருள்செழியன்
ÔÔமுதன்முதலாக விடுதலைப் புலிகளை ஒரு போராளி அமைப்பாக அங்கீகரித்ததோடு, ஈழப் பிரச்னையில் பேச்சுவார்த்தைகளைத் துவக்கி வைத்த இந்தியா, தற்போது ஈழப் பிரச்னையிலிருந்து விலகி இருப்ப தைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?
ÕÕÔÔபுலிகள் இயக்கத்தின் தோற்றத்துக்கு முன்பிருந்தே இந்தியா, ஈழத் தமிழ் மக்கள் மீது அனுதாபமும் கருணையும் காட்டி வந்துள்ளது. அதற்குக் காரணம், ஈழத்தில் இருந்தாலும் இன ரீதியாக நாங்கள் இந்தியர்கள்தான்! எங்களது மூல வரலாறு இந்தியாவிலிருந்துதான் ஆரம்பமாகிறது.எண்பத்து மூன்றாம் வருடம், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக ஒரு மிகப் பெரிய வன்முறை கட்ட விழ்த்துவிடப்பட்டு, பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் கொல்லப் பட்டனர். உடைமைகள் சேதப்படுத்தப் பட்டன. அது தமிழ்நாட்டில் பெருங் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆர்ப் பாட்டங்களின் மூலமும், பேரணிகள் மூலமும் தமிழக மக்கள் தங்கள் ஈழத் தமிழர் ஆதரவு உணர்ச்சிகளைக் காட்டினார்கள். அப்போதுதான், ஈழத் தமிழர் பிரச்னை என்பது ஏதோ இலங்கைத் தீவுக்குள் அடங்கும் பிரச்னை அல்ல; அதன் விளைவுகள் இந்தியாவின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற உண்மையை உலகம் உணர்ந்தது.அதன் பிறகு, இந்திய அரசு ஈழத் தமிழர் பிரச்னையில் நேரடியாகத் தலையிட ஆரம்பித்தது. இந்தச் சூழ்நிலையில்தான், ஈழத் தமிழர் பாதுகாப்புக்கு ஒரு கவசமாக எமது விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும், வேறு சில போராளிக் குழுக்களுக்கும் ஆயுதம் கொடுத்து, ராணுவப் பயிற்சி கொடுத்து எங்களை வளர்த்தது இந்தியா. இது வரலாற்று உண்மை!அதை நாங்கள் எப்போதும் மறந்ததில்லை. இப்படியாக எங்களுக்குப் பேருதவிகள் செய்து, எங்களை ஒரு விடுதலை அமைப்பாக அங்கீகாரம் செய்து, திம்பு பேச்சு வார்த்தையில் பங்கு பெறச் செய்ததும் இந்தியாதான். அதன் பிறகு பல்வேறு காரணங்களால், இந்திய அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சில முரண்பாடுகள் எழுந்தன (இந்த இடத்தில், கவனத்தோடு சில கடந்த கால நிகழ்வுகளைத் தவிர்க்கிறார்).அதனால், இடைவெளிகள் தோன்றின. சில மனக் கசப்பான சம்பவங்கள் நிகழ்ந்தன. ஆனாலும், ஒட்டுமொத்தமாகச் சொல்லும்போது, இந்தியா அன்றிலிருந்து இன்றுவரை எப்போதுமே ஈழத் தமிழர்கள்பால் அனுதாபத்தோடுதான் நடந்து வருகிறது. இந்த நிலை தொடர வேண்டும், ஈழத் தமிழர்களின் நியாயமான உணர்வுகளை இந்தியா அங்கீகரிக்க வேண்டும் என்பதே எம் விருப்பம்.
ÕÕÔÔஇந்தியா & புலிகள் உறவில் முரண்பாடு ஏற்பட முக்கியமாக என்ன காரணம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
ÕÕÔÔதமிழீழம் சுதந்திர நாடாக உருவாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது விடுதலைப் புலிகள் இயக்கம். சிங்களப் பேரினவாதிகளிடம் இருந்து எம் மக்களுக்கு எந்த நியாயமும் கிடைக் காது என்று நாங்கள் உறுதியாக நம்பி னோம். அதனால் தான் எம் மண்ணை மீட்டெடுத்து, எமக்கான சுதந்திரத் தமிழீழத்தை உருவாக்குவதில் தெளிவாக இருந் தோம். ஆனால், இந்திய அரசு இதை விரும்பவில்லை.தமிழீழத்தில் ஒரு தனியரசு உருவானால், அது தமிழ்நாட்டிலும், இந்தியாவின் மற்ற சமூகங்களிடத்திலும் பிரிவினை எண்ணத்தைத் தோற்று விக்கும் என்ற அச்சத்தினால், எமது லட்சியத்தை அவர்கள் ஏற்க மறுத் தார்கள். இந்த அடிப்படையில்தான் முரண்பாடு எழுந்தது.
ÕÕÔÔதற்போது இந்திய அரசின் அணுகுமுறையில் மாற்றம் வரும் என்று நினைக்கிறீர்களா?
ÕÕÔÔஇந்தியா நேரடியாக இந்தப் பிரச்னையில் ராணுவ ரீதியாகத் தலையிட்டு, புலிகளுக்கு எதிராக ஒரு பெரும் ராணுவ நடவடிக்கையை எடுத்துப் பெரும் தோல்வியைத்தான் சந்தித்தது. விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்திய ராணுவத்தால் நசுக்க முடியவில்லை. மற்றபடி புலிகள் இயக்கம், இந்தியாவைப் பகைத்துக் கொள்ள விரும்பியதில்லை. எங்களுக்கு எதிராக யுத்தம் திணிக்கப்பட்ட காரணத்தால்தான் எதிர்த்துப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டோமே தவிர, நாங்கள் இந்தியாவுக்கு எதிராக ஆயுதங் களைத் தூக்குவதற்கு ஒருபோதும் விரும்பியதில்லை.ஏனென்றால், தமிழீழத்தைத் தாய்நாடாகப் பார்க்கும் நாங்கள், இந்தியாவைத் தந்தை நாடாகத்தான் எப்போதும் பார்த்துக்கொண்டிருக் கிறோம். புலிகளுக்கும் இந்திய அரசுக்கும் மத்தியில் நல்ல நட்புறவு ஏற்பட வேண்டும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அப்படியான ஒரு சூழ்நிலை நிச்சயம் விரைவில் ஏற்படும் என்பதுதான் எனது கருத்து.
ÕÕÔÔஈழப் போராட்டத்தில், உங்களது பங்களிப்பில் நெகிழ வைத்த தருணம் என்று எதைக் கருதுகிறீர்கள்?
ÕÕÔÔஇந்திய அமைதிப்படை ஈழத்தில் இருந்தபோது நடைபெற்ற துயரச் சம்பவம்தான் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.எண்பத்தேழாம் வருடம், அக்டோபர் இரண்டாம் தேதி பருத்தித்துறை கடற்பகுதியில் வைத்து குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட பதினைந்து முக்கியப் போராளிகள் ஸ்ரீலங்கா கடற்படையினரால் நிராயுதபாணி களாகக் கைது செய்யப்பட்டு, பலாலி ராணுவ முகாமில் தடுத்து வைக்கப் பட்டிருந்தார்கள். இந்திய அரசுடனும், இலங்கைக்கான இந்தியத் தூதுவரிடமும் பேசி அவர்களை விடுவிக்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டு இருந்தது.நான் இந்தியத் தூதரிடம் பேசியபோது, இலங்கை ராணுவத்துடன் பேசி அவர்களை விடுதலை செய்து விடலாம் என்று நம்பிக்கை தெரி வித்தார். நான் பலாலி ராணுவ முகாமில், சிங்கள ராணுவத்தின் வசமிருந்த எம் போராளிகளை இந்திய அமைதிப்படை அதிகாரிகளின் உதவியுடன் சந்தித்தேன். எம் போராளிகள் அங்கு குற்றவாளிகளைப் போலத் தரையில் உட்கார வைக்கப்பட்டிருக்க, அவர்களை நோக்கித் துப்பாக்கி முனைகளைத் திருப்பியவாறு சிங்கள ராணுவத்தினர் நின்றிருந்தனர். நான் போராளிகளிடம் பேசினேன். அவர்கள் மகிழ்ச்சியுடனும், கலக்கமின்றியும் தாங்கள் விடுவிக்கப்பட்டு விடுவோம் என்ற முழு நம்பிக்கையுடனும் இருந்தார்கள்.குமரப்பாவும், புலேந்திரனும் அதற்குச் சமீபத்தில்தான் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். அவர்கள் தங்கள் மனைவியருக்கு, ‘கவலைப்பட வேண்டாம். விரைவில் வந்துவிடுவோம்’ என்கிற தகவலை என் மூலம்தான் சொல்லியனுப் பினார்கள். ஆனால், மறுநாளே நிலைமை மோசமானது. இலங்கைப் பாதுகாப்பு அமைச்சர் அதுலத் முதலி, போராளிகளை கொழும்புவுக்குக் கொண்டுவந்து விசாரணைக்கு உட்படுத்த ரகசியத் திட்டமிட்டிருப்பதாக, இந்திய ராணுவ அதி காரிகள் என்னிடம் தெரிவித்தனர்.நான் மறுபடியும் போராளிகளைச் சந்தித்தேன். அப்போது அவர்கள், தலைவர் பிரபாகரனுக்கு ஒரு ரகசிய கடிதத்தை என்னிடம் தந்து அனுப்பினர். நான் அந்தக் கடிதத்தை அன்றிரவே தலைவரிடம் சேர்த்தேன். இயக்க மரபுப்படி, எதிரிகளிடம் சிக்காமல் வீர மரணம் அடைய ஏதுவாக, தங்களுக்கு சயனைட் குப்பிகளை வழங்கக் கோரி எழுதிய கடிதம் அது. அதைப் படித்ததும் பிரபாகரனின் கண்கள் கலங்கின. உதடுகளைக் கடித்தபடி சற்று நேரம் யோசித்தவர், இந்திய அரசுடன் மேலும் பேசி, உடனடியாகப் போராளிகளை மீட்கும்படி சொன்னார். நான் மீண்டும் முயன்றேன். ஆனால், என் முயற்சி எதுவும் பலன் அளிக்கவில்லை. இந்தியத் தூதரும் தன்னால் எதுவும் செய்ய முடியாத அளவுக்கு நிலைமை ஆபத்தாகிவிட்ட தாகத் தெரிவித்தார்.மறுநாள், ஒரு விசேட ராணுவ விமானத்தை அதுலத் முதலி, பலாலிக்கு அனுப்பிவைத் துள்ளார் என்றும், அன்று மாலை ஐந்து மணிக்கு எமது போராளிகள் பலவந்தமாக விமானத்தில் ஏற்றப்படுவார்கள் என்றும் இந்தியத் தூதர் என்னிடம் கூறினார்.நான் உடனடியாக விரைந்து சென்று, பிரபாகரனிடம் தகவலைத் தெரிவித்தேன். துயரமும், கவலையும், கோபமும், விரக்தியுமாக பல்வேறு உணர்வலைகள் கலந்ததால், பிரபாகரனின் முகம் விகாரமாக மாறியது. தனது மெய்ப் பாதுகாவலர்களான புலி வீரர்களை அழைத்து, அவர்களது கழுத்து களில் தொங்கிய சயனைட் விஷக் குப்பிகளைச் சேர்த் தெடுத்து, என் கழுத் திலும், மாத்தையாவின் கழுத்திலும் மாலையாக அணிவித்தார். எப்படியாவது அந்தக் குப்பிகளை எமது போராளிகளிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்ற உத்தரவும் பிறப் பிக்கப்பட்டது.அன்று மதியம் உணவுப் பொதிகளுடன் பலாலி தளம் சென்று, எமது போராளிகளுடன் நிகழ்த்திய இறுதிச் சந்திப்பின்போது தலைவரின் வேண்டு கோளை நான் நிறைவு செய்தேன். எதிரிகளிடம் சிக்கிச் சாவதைவிட, தங்களின் உயிரைத் தாங்களே மாய்த்துக்கொள்ள, அந்தப் பதினைந்து போராளிகளும் சயனைட் குப்பியைக் கடித்தார்கள். சிங்கள ராணுவத்தார் துப்பாக்கி பேனட் டாலும், லத்தியாலும் அவர்களின் தொண்டைக் குழிக்குள் குத்தி, விஷம் இதயத்தில் பாய்வதைத் தடுக்க முயன்றபோதும், எமது மிக முக்கியமான பத்து வேங்கைகள் அந்த இடத்திலேயே வீர மரணம் எய்தினர். ஐந்து பேர் மட்டும் பிழைக்கவைக்கப்பட்டனர்.விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராட்ட லட்சியத்துக்காக நான் பட்ட அனுபவங்களில், இதுவே எனது ஆன்மாவை உலுக்கிய மிக வேதனையான சம்பவமாகும்!
ÕÕ\ (அடுத்த இதழிலும் ஆண்டன் தொடர்கிறார்)
இது விகடனின் பழைய பிரதிகளில் இருந்து எடுக்கபட்ட விடயம்
இந்த நிகழ்வின் இன்னொரு பக்கத்தையும் பாருங்கள். அந்த நேரம் தமிழீழத்தில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவத்தின் கட்டளை தளபதி தெபிந்தர் சிங் "உண்மையில் களத்தில் நடந்தது என்ன?" என்று கூறுகிறார். .
Questioner: And what exactly happened during the boat tragedy in which the LTTE cadres committed mass suicide?
DS: Yes, I was having a meeting with him, I came down from the boat. Mahathiah had come down a little later. Kumaran, the Trincomalee leader, and Pulinderan, the Jaffna leader, they were in the boat. Mahathiah said, General, I want to talk to you. I had a major who could translate. Prabhakaran spoke to me in English many a time. He appeared well-read. He [Mahathiah] said, At all cost these people [who were surrounded by Lankan troops] must be released. IPKF is here to protect the LTTE, and they should not go to Colombo. Otherwise, they will be tortured. They were 17, four we were able to save. So instead of going to Colombo, we flew them from the naval base to the Jaffna airbase. Now, the tamasha started. There were LTTE, around them were the Indian troops, around us were the Sri Lankan troops, around them were the Indian troops, around them the APCs of Sri Lanka. Now tell me, if you try to fight, there would have been a conflict between the Sri Lankan and Indian troops. Of course, the orders were very clear to the [Sri Lankan] brigade commander, otherwise get into the helicopter and reach Colombo, relinquish the command. Wo tho haath jhod tha tha, ke mein mara ja raha hum kaam kaam kar ke. Anyway I was told, you go to Trincomalee and prevent reinforcement of Trincomalee by Sri Lankans. Deny the airport to them. I reached Trincomalee, and we took over the control tower, commandos were deployed, no troop movement was allowed. It created lot of ill-feeling with the Sri Lankan troops. In the meantime, I had said that it was high time that Dixit, who was on leave in Delhi, go to Colombo, and mediate their release in the boat. Depinder Singh also flew, I generally had my hat off to him but he was not a strong man. I needed a commander like Maneckshaw or Rolli who could stand up to the government at the cost of their own service. So how did the boat tragedy end? I was guarding the airfield. And all of them came, Depinder, Dixit and some other staff officers. They landed there, they could not convince Jayewardane, and he was too clever for them. Too clever. I cannot have that much say in my country?
he asked them. You are given amnesty to them, fulfill it, but these politicians, they couldn't. Depinder next day flew into Trincomalee and told me, Hand over, let them go and do whatever they want. Let us go and have a cup of tea with them, with the three chiefs. They were staring at me: This man created all the problems. Anyway, we had a cup of tea. At 2 o'clock I get a message, why is the G-o-C IPKF interfering in the 'constitutional activities of Sri Lanka?
These were the exact words. This message came all the way from the force headquarters in Madras. And, 'Please lift your siege in Jaffna, let the Sri Lankans do what they want to.' I was upset. I was in Trincomalee; they were in Jaffna, my staff officers, everybody was taking charge of everything. I spoke to my Colonel G S Hoshiar Singh. He said, Saab ea hukhum aya hein. I said, Chod do, aap tho ye mili gaya tho. Chod gaya tho mare jayenge saren. He said, Anyway we have got ambulances, cars, 13, 14 of them, the hospital is all geared up to flush poison. Our troops withdrew, the Sri Lankan troops charged, and these fellows swallowed cyanide. Those who chewed, they died on the spot, those who swallowed were saved. This created chaos in the Indo-Sri Lankan entity. That the Indian army, IPKF, could not save them. Now this man blames me. This Dixit. The general left them off. Bhai, mene kya bola?
What was Dixit's approach to your attempts to buy peace with LTTE?
Once he said, Shoot Prabhakaran, shoot Mahathiah. I said, Sorry I don't do that. Those were his orders. When they came to me at 12 o'clock at night for some work, he said shoot them. General, I have told you what I have ordered. I said, I don't take your orders. And we are meeting under a white flag, you don't shoot people under white flag.
So who messed up during the boat tragedy?
The responsibility is entirely on the diplomats, entirely on the army headquarters. Otherwise, for me to save those people was no problem. I would have just put them into few APCs and smuggled them out. Sri Lankans tho dekthe raha jathe [The Sri Lankans would have just looked on]. We would have taken them out, we had all the troops there. No problem.
What did you feel when the orders came to leave the LTTE men to their fate?
I felt terribly bad about it. Because Kumaran's wedding was attended by one of my brigadiers. Pulinderan was also there. A dreadful man. Wanted for 34 murders by Ranatunga. Every day he used to tell me, General, mujhePulinderan de do. [give me Pulinderan] " I used to tell him, Pulinderan nahi detha, Pulinderan mere saath mere Jeep mein jhatha hain [I won't give you Pulinderan, he will travel with me in my Jeep]. And they [the LTTE] were very cordial. They would take me anywhere. I had lot of time for them.
Specifically, did Dixit fail?
Dixit had the backing of the prime minister of India. He had a free hand in the affairs of Sri Lanka. He could have thumbed the table and told Jayewardane, sorry you have to do it. And if you don't do it, you know what the results will be. There will be riots, ethnic killings. Dixit could have done it. There was no question about Jayewardane not listening to him. Dixit may be a high commissioner, but he was a high commissioner of great standing. When you have the backing of the boss, you will be on the top of the world. You can make any statement to these people.
Reference : http://in.rediff.com/news/2000/mar/23lanka.htm
http://www.viduthalaipulikal.com/file/docs/2005/07/14-06.pdf
Thursday, February 07, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Hi,
Thanks four explanation. I have some questions to you. I am not sure why the story always starts with October 2 1987 where 17 militants were arrested or with 22nd October in which hospital was attacked.I want to put some facts here. Do you know the cadre who threw a hand grenade on the IPKF and ran in to the Jaffna hospital to escape from the IPKF .?. IPKF was at srilanka from July onwards. I would request you to write the incidents prior to October 2 also.
I shall explain, Around august, the talk of election were started where LTTE claimed more representataives and wants to dominate every other groups. In the mean time IPKF undertook to repair railway lines and by August 30 they managed to start Jaffna-Colombo train services which had been disrupted since 1986. Shop shelves started filling up with goods from Colombo as train and road communication improved. Banks were opened, indicating a return of normalcy in the war-ravaged areas.
On August 24, A member of the PLOTE was shot dead by LTTE and LTTE start complaining that IPKF is arming other militant groups like EPRLF, PLOTE, ENDLF and TELO.
In September, things in Jaffna took a turn to the worse, with continued acts of violence. As many as 120 people were killed between September 13 and September 22, in a series of clashes between Tigers and the rival Tamil militant groups, and the LTTE slowly but steadily initiated a campaign trying to discredit the presence of IPKF in the North and East.
Fearing that IPKF will only help other groups, LTTE made propaganda that IPKF is here for personal reasons and made the fasting of Theeleepan a sensitive issue.This created anti Indian feelings among people of eelam.
LTTE which wants to dominate every other group announced that accord is failed and was looking for a opportunity to start fight against IPKF.
Then violent clashes began between September 30 and October 4 between the LTTE and Sinhalese residents in the Trincomalee district. At least 18 people were killed and 5,000 left homeless. As the clashes mounted, the Sri Lankan government accused the Indian army of doing nothing to protect Sinhalese civilians. Colombo threatened to send the IPKF packing if it could not bring the Trincomalee district under control.
Then the Sri Lankan Navy on October 2 apprehended 17 LTTE men traveling in a boat off the coast of Point Pedro and were acting in breach of the accord by transporting arms from Tamil Nadu, and also in breach of Sri Lankan immigration formalities. The navy disarmed them, took off their necklaces with cyanide capsules and took them to Palaly, where the Sri Lankan Army and the IPKF had their bases.
This people on October 5 at about 5:30 in the evening, swallowed cyanide capsules and 12 of them died instantly, including Pulendran and Kumarappah, and three died later in the IPKF hospital at Palaly.
This is the turning point LTTE, LTTE which was looking at opportunity to fight IPKF started the fight.the first landmine exploded under the IPKF jeep in October 87. You need to understand the not a single Tamil civilian or an LTTE cadre was killed by the IPKF before the IPKF was attacked.
Now tell me how IPKF is responsible for fight. If LTTE would have agreed for seat sharing then eelam would have been peace land now.
Post a Comment