Saturday, November 28, 2009

என்னவென்று ஏசுவது? எதால் அடிப்பது?


ஏதாவது செய்தாக வேண்டும். ஆர்ப்பரிக்கும் கடலலையைப் போல உள்ளம் குதித்துக் குதித்து அடங்க மறுக்கின்றது. கரை முழுதும் ஓடிச் செல்லும் அலை போல ஓடியோடி அடங்க மறுக்கின்றது மனம். காற்றைத் திருகி முறுக்கிக் கொலை செய்யவும் கைகள் பரபரக்கின்றது.
ஏதாவது செய்யவேண்டும். எப்படியாவது தன் எதிர்ப்பைக் காட்டும் குழந்தயைப் போலவாது வாயிலிருப்பதைத் துப்பியாவது எதிர்ப்பைக் காட்டவேண்டுமென்று இருக்கின்றது.

இறந்து போன மக்களைப் பற்றித் துயரப்படாத மனங்களை கல்லுக்கும் மலைக்கும் ஒப்பிட்டு விலகி விட்டேந்தியாகப் போக முடியாதிருக்கின்றது. பொறாமையோ இயலாமையோ என்ன இழவையோ சுமந்து கொண்டு வெறும் சோற்று மூட்டைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஆறு கோடித் தமிழர்களை எந்த ஆறு பெருக்கெடுத்து அள்ளிப்போகும் என்று கோபம் குமைந்து கொண்டிருக்கின்றது.

ஒரு நாதாரி கூனும் வயதிலும் நடுங்கும் கரத்திலும் குழறும் வாயிலும் சொல்லும் வார்த்தைகள் உயிரைக் குடிப்பதை மறந்து என்ன வாழ்க்கை பற்றி நாங்கள் கனவு கண்டு கொண்டிருக்கின்றோம். புலிகளின் கொட்டங்கள் எந்தக் குப்பைக்கூடையிலும் கொட்டுப்பட்டு போகட்டும். அவர்களின் பிழைகளைக் கூட அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்து வியாக்கியானம் செய்து வைப்போம். அவர்களின் தோல்வியைக் கூட கைதட்டி பியர் குடித்து வரவேற்போம்.

அவர்களுடன் கூடவே செத்து மக்கிப்போன நம் மக்களை எந்த வகையில் சேர்த்துக் கொள்வது. அவர்களின் சாவிற்கு எந்த உவமையையும் மோனையையும் சேர்த்து கவிதை புனைவது. வாழ ஆசைப்பட்டு அனாதைகளாக செல்லடியிலும் குண்டடியிலும் இரத்தச் சகதிகளாகச் சிதைந்து போன அந்த மக்களின் இறப்பைக் கூட இந்த புளுத்துப்போன வாயினாலும் இத்துப்போன வார்த்தைகளாலுமா நாம் விளங்கிக் கொ
ள்வது. தமிழனாக இல்லாவிட்டாலும் சக மனிதனாக ஒரு துளி கண்ணீர் விட யாரிடம் உத்தரவு கேட்டு இறைஞ்சி நிற்கின்றோம்.

மரணித்த மாவீரர்களின் கல்லறையில் ஒரு பூவை எடுத்தெறிய இந்த வஞ்சகப் புழுவின் வாய் ஜாலங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் உடன் பிறப்புகளை எரித்துப்போடுவதால் என்ன குறைந்து விடும். உடன் பிறப்பு தமிழுக்காகவா? அல்லது தமிழை வைத்து விபச்சாரம் செய்யும் மு.க விற்காகவா?

புலிகளின் அழிவு பிரபாகரனின் பிழையினால் என்று கூற இந்த முட்டாள் கிழவனுக்கு யார் துணிவைத் தந்தது? தமிழினத்தின் தலைவன் என்று சொல்லிக்கொண்டது காக்கைவன்னியன் போல காட்டிக்கொடுக்கவா? இந்திப் பெண்ணை எதிர்த்து கரி பூசிய இவர்களா இன்று இத்தாலிப் பெண்ணின் முந்தானையில் முகம் புதைத்துத் தூங்கிக் கொண்டிருக்கின்றார்கள். இந்தக் கொள்கையினால் உந்தப்பட்டுத்தானா? இன்று தமிழகம் மு.க வின் தலைமையில் புளகாங்கிதமடைந்து நடை போடுகின்றது. இதைப்பார்த்து பொதிகை மலையில் தமிழ் வளர்த்த அகத்தியன் எரிந்த எழுத்தாணி அரபிக்கடலில் புதைந்து தொலைந்து போகின்றதே.

கலைமாமணி விலைமாமணியாகி எத்தனையோ காலமாகி விட்டது. அதையே இந்தப் புல்லுருவி "அம்மா கொடுத்த முத்தம் போல் "இருக்கின்றது என்கின்றது. தன் மகன் போர்க்களத்தில் புறமுதுகிட்டான் என்று கேட்ட தமிழ்த் தாய் தன் முலையை அறுத்து எறிந்தாள் என்று கேள்விப்பட்டிருக்கின்றோம். புறமுதுகிட்டதுடன் காட்டிக்கொடுத்த இந்த கருப்புக்கண்ணாடியின் தாய் எத்தனை முறை தன் முலை அறுத்து எறிவாள்.

"தம்பி தமிழ்ச் செல்வா" என்று தகிடு தத்தம் போட்ட இந்த கிழட்டாடு இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கின்றது. இந்த வேற்றுமை கூட அறியாத தமிழறிஞர்களா செம்மோழியில் மாநாடு நடத்திக் கிழித்து விடப்போகின்றார்கள்.

என்ன? துக்கம் என் தொண்டையை அடைக்கின்றது. இதையெல்லாம் தட்டிக்கேட்கும் ஒரு குரல் கூட இல்லாத செத்த மக்கள் வாழும் நாடா ? தமிழகம்.இறந்து போன மாவீரர்களுக்கு கொடையா படைக்கின்றோம் ஒரு பூவெடுத்துப் போடும் நிகழ்வையும் நடாத்தவிடாது புழுத்துப்போன இளங்கோவன் பானர் எல்லாம் கிழித்தெறிக்கின்றான்.அவன் வீட்டில் வீசிய குண்டு அவன் தலையில் போட வேண்டியது. இந்தப் பொறுக்கிகளையெல்லாம் நாட்டில் நடமாடவிட்டு குடை பிடிக்கும் தமிழனுக்கு எதிரியின் கையால் ஒரு குவளை நீர் கூட குடியாது உயிர் விட்ட சேரலாதன் இரும்பொறையின் கதையை நினைவு படுத்த வேண்டும்.

தமிழனின் சரித்திரத்தை மறந்து விட்ட இந்த தமிழ் நாட்டுச் சனத்தை என்னவென்று ஏசுவது? எதால் அடிப்பது?

Friday, November 27, 2009

தமிழ் மணமா? தமிழ் பிணமா?

ஏன்யா என்ன தான் நடக்கின்றது இங்கே?


வாசகர் பரிந்துரை
மதம் பற்றி பெரியார்
4
தமிழ் ஓவியா

இனவெறி, பார்ப்பனீயம்
5
Dr.Rudhran

நைனா...நறுக்குன்னு நாலு வார்த்த...
8
பிரியமுடன்...வசந்த்

தமிழ்மணத்தில் உங்கள் ஓட்டைப் போட முடியவில்லையா?
12
SUREஷ் (பழனியிலிருந்து)

நம்பர் 6,விவேகானந்தர் தெரு,துபாய்
5
இரும்புத்திரை அரவிந்த்

யோகி?? - விமர்சனம்
4
ஜெட்லி

தமிழினத் தலைவா...
9
புலவன் புலிகேசி

கொஞ்சம் தேநீர்- நான் உறங்க!
6
தேவன் மாயம்

குறிஞ்சிப்பண்: நீலகிரியின் மலையரசி கதறுகிறாள்!
7
வினவு

ஒலியும் ஒளியும்
9
பா.ராஜாராம்

மேலும் பரிந்துரைக்கப்பட்ட இடுகைகள்
4
மதம் பற்றி பெரியார்
4/4 | தமிழ் ஓவியா | பெரியார்
மதம் என்பதும், சமயம் என்பதும், சமயநெறி என்பதும் மற்ற ஜீவன்களிடத்தில் மனிதன் நடந்து கொள்ள வேண்டிய நடையைப் பற்றிய கொள்கைகளைக் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
3
யோகி - திரைப்பட விமர்சனம்
3/3 | உண்மைத் தமிழன்(15270788164745573644) | சினிமா விமர்சனம் | சினிமா
27-11-2009 என் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
5
இனவெறி, பார்ப்பனீயம்
5/6 | Dr.Rudhran | பார்ப்பனீயம்
இதை எழுத நேர்ந்ததே என்ற வருத்தமும் , அவசரமாக இதை எழுதுகிறேனே என்ற ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
3
சந்தன முல்லை என்கிற பப்புவின் ஆச்சி பற்றி...
3/3 | ஜெயந்தி
இந்த முறை வலைப்பூ விமர்சனத்திற்கு சிக்கியவர் சந்தன முல்லை. " சித்திரக்கூடம் " சந்தன முல்லை. இந்தப் பெயர்தான் என்னை அவர்பால் ஈர்த்தது. ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
4
வி.பி. சிங் நினைவு நாள் சிந்தனைகள்
4/4 | தமிழ் ஓவியா | பெரியார்-மயிலாடன் -மூடநம்பிக்கை- பார்ப்பனியம்
வி.பி. சிங் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
8
நைனா...நறுக்குன்னு நாலு வார்த்த...
8/8 | பிரியமுடன்...வசந்த் | சமூகம் | சினிமா
முடங்கி கிடந்த நிறுவனத்துக்கு மு.க.அழகிரி நிதி உதவியால் அந்நிறுவனம் லாபம் ஈட்டியது.. ம்க்கும்...நிதிக்குடும்பமாச்சே...அதான்...இவங்ககிட்ட இருக்குற நிதியெல்லாம் கொடுத்திருந்தால் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
12
தமிழ்மணத்தில் உங்கள் ஓட்டைப் போட முடியவில்லையா?
12/12 | SUREஷ் (பழனியிலிருந்து) | தொழில்நுட்பம் | தமிழ்மணம் | அனுபவம்
தமிழ்மணத்தில் ஓட்டுப் போடுவது என்பது ஏழுகடல் ஏழுமலை தாண்டி குகைக்குள் குடியிருக்கும் முனிவரின் வாயில் புகுந்து வியர்வை வழியாக வெளியேறுவதைப் போன்று சிரமமான காரியமாக இருந்து வருகிறது. ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
5
நம்பர் 6,விவேகானந்தர் தெரு,துபாய்
5/5 | இரும்புத்திரை அரவிந்த் | நையாண்டி | கும்மி | அனுபவம்
நம்பர் 6,விவேகானந்தர் தெரு,துபாய் இந்த காமெடி பாக்கும் போதெல்லாம் என்னை மறந்து சிரித்து இருக்கிறேன்.ஆனா இப்போ இந்த காமெடி வந்தாலே உடனே சேனல் மாற்றி விடுவேன்.அப்படி என் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
4
யோகி?? - விமர்சனம்
4/4 | ஜெட்லி | சினிமா விமர்சனம் | யோகி
யோகி ?? இயக்குனர் அமீரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் யோகி.சுப்ரமணியன் சிவா கதையிலும் இயக்கத்திலும் அமீரின்வசனத்திலும் திரைக்கதையிலும் இன்று உலகம் முழுவதும்ரிலீஸ்.படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் என்பதாலும்அமீரின் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
9
தமிழினத் தலைவா...
9/9 | புலவன் புலிகேசி | தமிழினத் தலைவா
தமிழினத் தலைவா உனக்கு நேற்று பிறந்த ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
6
கொஞ்சம் தேநீர்- நான் உறங்க!
6/6 | தேவன் மாயம்
ஒரு சிறு அமைதி, ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
7
குறிஞ்சிப்பண்: நீலகிரியின் மலையரசி கதறுகிறாள்!
7/7 | வினவு | இன்று | கவிதை | முதலாளித்துவம்
மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி எனக் குறிப்பிடும் இலக்கியங்கள்-அது தொழிலாளர் கொலையும் கொலைசார்ந்த இடமும் எனக் காட்டும் வரலாற்றின் இரத்தக் காயங்கள். ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
3
ஒரு பேச்சுலரின் "புலம்பல்கள்..."
3/3 | நாஞ்சில் பிரதாப் | புலம்பல்கள் | நகைச்சுவை | அனுபவம்
தங்கமணிகளும், ரங்கமணிகளும் ஆளுக்காளு மாத்தி, மாத்தி புலம்பிட்டு இருக்காய்ங்க... பேச்சுலர்கள் மட்டும் புலம்ப கூடாது என்ன? இதோ ஒரு பேச்சலரின் புலம்பல்கள்: ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
9
ஒலியும் ஒளியும்
9/9 | பா.ராஜாராம் | கவிதைகள்
(picture by CC licence, thanks Mark ) ஒன்று. ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
3
என்னமோ நடக்குது
3/3 | சின்ன அம்மிணி | சர்வேசனின் நச்னு ஒரு கதை போட்டி
சர்வேசன் சிறுகதைப்போட்டி ஒண்ணு நடத்த , நம்மளும் சும்மா இருக்காம திருப்பம் என்ற பெயரில் ஒரு கதை எழுதி அது முதல் இருபதுக்குள்ள இடம் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
6
தோழா நீ எங்கே...
6/7 | ஹேமா | கவிதை ஈழம்
தோழா... எமக்கான தேவைகளை சமாதானத்திற்கான வார்த்தைகளை எமக்காகப் பேசி பார்வைகளால் விதை தூவி பயிரிட்டவன் நீ எங்கே நீ ! ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
5
சமச்சீர் கல்வி - ஒரு உரத்த சிந்தனை!
5/5 | மாதவராஜ் | சமச்சீர் கல்வி | நிகழ்வுகள் | சமூகம்
கார்ட்டூன் பக்கம் நன்றி : தி ஹிந்து நாளிதழ், 26.11.2009 ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
9
எ ஃபார்...
9/9 | சந்தனமுல்லை | உயிரெழுத்துத் தொடர் | நினைவுகள் | மொக்கை
..... எடுத்துக்காட்டு !! இந்த ' எ . கா ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
7
சினிமா வியாபாரம்-13
7/8 | Cable Sankar | தொடர் | Cinema Business | சினிமா வியாபாரம்
லேப் லெட்டர் நாங்கள் புதியவர்கள் என்பதால் ஃபர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட் போலவே நாங்கள் தயங்கி, தயங்கி நிற்க, படத்தை ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
8
தமிழ் தேசிய தலைவனின் அன்பும் கொக்கரிக்கும் சிங்களமும்.
8/9 | ஹேமா | ஈழம்
இந்தியாவுக்கும் எதிரான சிங்களம். 2008 ம் ஆண்டில் தலைவரின் உரை. ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
14
அழகே உன்னை ஆராதிக்கிறேன்...
14/15 | தண்டோரா ...... | அழகு/கதிர்/ரம்யா/அப்துல்லா/ராமலட்சுமி/தொடர்
அழகு என்பதற்கு ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
3
இசைமேடையில் இந்த வேளையில் சுகராகம் பொழியும்...
3/3 | சரவணகுமரன் | மகேந்திரன் | இசை
மகேந்திரனின் விரல் உதிர்க்கும் இசையெழுத்துக்கள். --- சமீபத்தில் நண்பரின் திருமணத்துக்காக விழுப்புரம் சென்றிருந்தேன். முதல் நாளே சென்றதற்கு அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியும் காரணம். ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
9
கலங்கரை விளக்கொரு காவதம் கோடியா..?!
9/9 | கலகலப்ரியா | பொது | உலகம் | சிந்தனை
இரைப்பையில் இன்னமும் இருந்து கொண்டிருந்த ஐஸ் கிரீம்... இடைச்சிறுகுடல் தாண்டிக் கொண்டிருந்த இடியப்பம் ஆகியவற்றை தொண்டையை நோக்கி இழுத்து... வாய் வழியாக வெளியேற்ற வழி செய்து ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
15
தொழுது நிற்கிறோம்!
15/18 |
அகண்ட தீக்குளித்து அன்றலர்ந்த அல்லியாய் வந்தபோது தெளிந்தது சீதையின் கற்பல்ல இராவணனின் சீலம்! கையறு நிலையிலும் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
6
பிடிக்காத பத்தும் சில பதில்களும்........
6/6 | அது சரி | மொக்கை | கலாச்சாரம் | பதிவர் வட்டம்
// ஆதிமூலகிருஷ்ணன் has left a new comment on the post " ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
4
மதவெறிக் கும்பலில் இந்து என்ன? இஸ்லாமியர் என்ன?
4/4 | தமிழ் ஓவியா | வீரமணி
ஜஸ்டிஸ் லிபரான் ஆணையத்தின் அடிப்படையில் குற்றவாளிகள் மீது ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
7
நான் தேடிக்கொண்ட பரிகாரம்...
7/7 | பிரபாகர்
என்னோட சின்ன வயசில நடந்த விஷயம் இது. மூனாவது படிச்சிகிட்டிருந்தேன். ஊர்ல எதாச்சும் நல்லது கெட்டதுன்னா உடனே ரேடியோ கட்டிடுவாங்க. 'போனால் போகட்டும் போடா...', 'சட்டி ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
3
"நானும் தமிழன் தானே\' காக்கை வன்னியன் கருணாநிதியின் ...
3/3 | இட்டாலி வடை
"முரசொலி'யில் இரண்டாவது முறையாக வெளிவந்துகொண்டிருந்த "பாயும்புலி பண்டாரக வன்னியன்' என்ற வரலாற்று காவியம் முடிவடைந்துவிட்டது. ஆனால், அந்த வீர காவியம் வாழ்ந்து ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
4
கதம்பம் - 26/11/09
4/4 | வடகரை வேலன் | கரிசல் இலக்கியம் | கரிசல் கதைகள் | மும்பை
தனிப்பதிவிட்டும், பின்னூட்டமிட்டும், நேரிலும், மின்னஞ்சலிலும், குருஞ்செய்தியிலும், கை பேசியில் அழைத்துமென வாழ்த்து மழையில் நனைத்த உள்ளங்களுக்கு நன்றி. ** சென்ற ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
3
எழுச்சி நாள்
3/3 | இட்டாலி வடை
இமயம் முதல் குமரி வரை கொடி நட்டு ஆண்டான் தமிழன். கப்பலோட்டி கடலையும் அளந்தான், வென்றான் என்ற கதைகளை ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
4
பெரியாருக்கு யுனெஸ்கோ மன்றம் பாராட்டு!
4/4 | தமிழ் ஓவியா | வீரமணி
...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
5
அந்த அழகான காதல் கதை
5/5 | இட்டாலி வடை
மனிதர்கள் தெரிந்தோ தெரியாமலோ தவறு விடுகின்றார்கள். தமக்கு சம்பத்தப்படாத விடயங்களில் தலையிடுவதோடு மற்றவர்களைக் காயப்படுத்தவும் தயங்குவதில்லை. அந்த வலியும் வேதனையும் தமக்கு தமக்கு வரும் வரையும் அதைத் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
8
ஹீரோ!
8/9 | | கற்பனை | நகைச்சுவை
என் பேரு. அது எதுக்கு ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
3
பிழைக்கத்தெரியாதவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
3/3 | குழலி / Kuzhali
இனத்தை அடகு வைத்து பிழைத்திருக்கலாம் உன் பேரன்கள் உலகின் பெரிய பணக்காரர் வரிசையில் வந்து சேர தமிழை அடகு வைத்து பிழைத்திருக்கலாம் உன் பையன்களுக்கு ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
4
இந்திய அரசமைப்புச் சட்டம் எதற்காகக் கொளுத்தப்பட்டது?
4/4 | தமிழ் ஓவியா | பெரியார்-மயிலாடன் -மூடநம்பிக்கை-பார்ப்பனியம்
நவம்பர் 26 ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
4
ஒரு தீவிரவாதியின் மறுபக்கம் - Flugten (The Escape)
4/4 | அதி பிரதாபன் | அ.பி. | விமர்சனம் | திரை விமர்சனம்
கடந்த வாரத்தில் கிடைத்த ஒரு மாலை ஓய்வு நேரத்தில் படம் பார்க்கலாமே என்று நினைத்தபோது, கண்ணில் பட்டதுதான் இந்தப் படம். Flugten (The Escape). டென்மார்க் படம். ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
6
சில நேரங்களில்
6/6 | அகல்விளக்கு
சில நேரங்களில் கடற்கரை காணும்போது உடல் நிலைத்து இருந்தாலும் மனது லயித்து குதித்தோடுகிறது. ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
5
பாசிஸ்ட் அரவிந்த் - நானும் புது பட்டம் வாங்கிட்டேன்
5/6 | இரும்புத்திரை அரவிந்த் | நையாண்டி | கும்மி | அரசியல்
கே.எஸ் ரவிகுமார்,விஜய் இவங்க எல்லாம் கூட டாக்டர் பட்டம் வாங்கிட்டாங்க.எட்டு மாசமா நானும் பதிவு எழுதி உயிரை வாங்குறேன்.எனக்கு ஒரு பட்டமும் கிடைக்கவில்லையே என்று சோகத்தில் சுருண்டு ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
4
அமீரகவாழ் அன்பர்களுக்கு RTA-வின் எச்சரிக்கை
4/4 | கிளியனூர் இஸ்மத் | எச்சரிக்கை
அமீரகவாழ் அன்பர்களுக்கு நவீனமுறையில் வழிப்பறிகளும் திருட்டுகளும் சமீபகாலமாக அமீரகத்தில் நடந்து வருகிறது. தியாகத் திருநாளை முன்னிட்டும் அமீர 38 ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
4
பசங்க எப்பவுமே இப்பிடித்தானா?
4/4 | அன்புடன் அருணா | பசங்க
"ஜன்னலைக் கொஞ்சமாய்த் திறந்து கொஞ்சமாய் மேகம் பிய்த்துக் கொண்டு வந்து ஷோ கேசில் வைத்திருக்கிறேன்......ஜன்னல் திறக்கும் போது ஐஸ் மழைக்கட்டி உள்ளே வந்து விழுந்ததாக்கும்"அம்மா திட்டினாங்க ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க


குறிப்பு:அந்த அழகான காதல் கதை
5/5 | இட்டாலி வடை இன்னும் முன்னால் வரவே இல்லை ...இது ஆட்டாமட்டிக்கா? அல்லது றீசன்மட்டிக்கா?

Thursday, November 26, 2009

அந்த அழகான காதல் கதை

மனிதர்கள் தெரிந்தோ தெரியாமலோ தவறு விடுகின்றார்கள். தமக்கு சம்பத்தப்படாத விடயங்களில் தலையிடுவதோடு மற்றவர்களைக் காயப்படுத்தவும் தயங்குவதில்லை. அந்த வலியும் வேதனையும் தமக்கு தமக்கு வரும் வரையும் அதைத் தவறென்றே உணருவதில்லை. இலவச ஆலோசனைகளை அள்ளிவிட்டுக்கொண்டிருப்பார்கள். அதில் ஒரு குரூர மகிழ்ச்சியும் அடைவார்கள்.

அப்படியொரு குரூர மகிழ்ச்சிதான் அந்த அழகிய காதலைப் பிய்த்துப் போட்டது. இரண்டு மனங்களை ரணகளப்படுத்தி விட்டது. இருவரை நடைப்பிண்மாக மாற்றி விட்டது.




'அழகான சிறு குருவிக் கூடாக கட்டியிருக்கும் இந்தக் காதலைக் குலைத்துப் போடாதீர்கள் கலைத்துக் போடாதீர்கள்.." என்று அவன் எழுதிப் போட்ட கடிதம் கன்ணீரில் கரைந்து போயிருக்கலாம். அல்லது கால்களில் தேய்ந்து போயிருக்கலாம்.

இன்று அந்த பென்ணின் தந்தை இல்லை. சமூகத்தின் எந்த நடைமுறைகளைக் கட்டிக்காக்கவென்று செயற்பட்டாரோ அவையெல்லாம் வெறும் சடங்காகவே சீரழிந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த இருவரும் இருந்து கொண்டிருக்கின்றார்கள். ஏதோ ஒரு திசையில் ஏதோவொரு நினைவில் காலங்களைத் தள்ளிக்கொண்டிருக்கின்றார்கள். கூடவே சாட்சியமாக இந்த டாக்டரும்.

அந்த அழகான காதல் கதையை நினைக்கையில் கூடவே கண்ணீரும் வந்து கல்ங்கிக்கழிகின்றது. காதலின் இனிமையைச் சொல்வதா? நிறைவேறாது போன துயரத்தைப் பகிர்ந்து கொள்ளவா? வலி சுளீரென்று உயிரைக் குலைக்கின்றது. இரண்டு வாழ்க்கை அழிந்து போன,அழிக்கப்பட்ட சோகம் துரத்துகின்றது. இருந்ததோ ஒரு வாழ்க்கை. அதன் பின் விட்ட தவறுகளைத் திருத்த யாரால்தான் முடியும்.

தனக்கு வலுக்கட்டாயமான நிச்சயயதார்த்தம் முடிந்து விட்டது என்று அந்தப் பெண் எழுதிய கடிதம் இன்றும் அவன் இதயத்தில் முட்களாக நெருடிக்கொண்டிருக்கின்றது. "ஐயோ நான் இழக்கக் கூடாத செல்வம் நீ.." என்று அவன் இதயம் இன்றும் கதறிக் கரைந்து கொண்டிருக்கின்றது.

அந்தக் காதலைக் கசக்கிப் போட்ட நீங்களும் உங்கள் கொள்கைகளும்..... நல்லாருங்கடே

(கண்களின் கண்ணீர் தொலைந்து விட்டால் இன்னும் தொடரும்)

Wednesday, November 25, 2009

தமிழ் மணம் வெட்கப்பட வேண்டும்


ஒரு அழகான காதல் கதையை கலைத்துப் போட்ட ஒரு சாதி வெறி பிடித்த டாக்டரை நட்சத்திரமாக்கியதற்காக தமிழ் மணம் நிச்சயம் வெட்கப்பட்டே தீர வேண்டும். அப்போதெல்லாம் அவர் பருத்தித் துறையில் பிறைவேற் கிளினிக் வைத்திருந்த பிரபல குள்ள டாக்டர்.

நாங்களும் தான் அங்கு எத்தனையோ முறை போய் காசைக் கொட்டியிருந்தோம். ஆனாலும் பணம் கறக்க விரிந்திருந்த பேராசை பிடித்த மனம் மக்களை மக்களாக மதிக்க விரிந்திருக்கவில்லை.

அந்த அனுபவத்தைத் தான் இங்கு விரிவாக உங்கள் முன் விரித்திருக்கின்றேன். அது ஒரு அழகான காதல் கதையாக இருந்த வேளை ஆபத்தானதாகவும் இருந்தது. காதல் வானில் சிறகடித்த சிட்டுகளுக்கு சமூகத்தின் கசடுகளைப் பற்றி சிந்திக்க ஏது நேரம். மணலைக் கயிறாகத் திரிக்கவும் வானத்தை வில்லாக வளைக்கவும் கற்பனை செறிந்த கனவுலகம் விரிந்து கிடந்ததே.

கற்பனைகளில் கூடு கட்டி என்னவொரு சுகமான வாழ்வில் அவர்கள் திளைத்திருந்தார்கள். ஆவாரம் பூவின் பெயரில் தொடங்கும் ஊரில் சைவர் சாதியில் பிறந்த அந்தப் பெண்ணை டாக்டரின் அயலூரவனான அந்தப் பையன் காதலித்ததும் கற்பனையில் மிதந்ததும் என்ன உலக மகா பாதகமா?

பெண்ணின் காதல் அறிந்த தந்தையார் தேடிப்போனதும் விபரம் கேட்டதும் இந்த டாக்டரைத்தான். அவர் சொன்னது "இந்த ஊரில் அந்தப் பெயரில் யாரும் இல்லை,சுத்தியிருக்கும் பள்ளோ நளமோ கரையானோ... எதற்கும் பிள்ளையைக் கவனமாகப் பாத்துக்கொள்ளுங்கோ.."

பெண்ணின் தந்தை "நல்ல மாட்டுக்கு ஒரு சூடும் நற்பார்த்தைக்கு ஒரு சொல்லும்" என்று எழுதி அந்தக் குருவிகளின் கூட்டைச் சிதைத்துப் போட்டதும் அந்தப் பெருமையைச் சூடிக்கொண்டதும் இந்த டாக்டரே.

மனிதரை மதிக்காதவன் டாக்டராய் இருந்தால் என்ன? தேவனாய் இருந்தால் என்ன?


குறிப்பு: இந்த டாக்டரைப் பற்றி இன்னும் நிறையவே கதைகள் இருக்கின்றன. தெரிந்தவர்கள் எழுதவும்.