Saturday, March 04, 2006

கருணாநிதியின் அரசியல் அஸ்தமனம்

நுணலும் தன் வாயால் தான் கெடும்னு சொல்வாங்கோ. கலைஞர் கருணாநிதி வாழ்க்கையில இந்த வார்த்தை சனி பகவானின் அக்மார்க் சொல்லாயிட்டுதுங்க . மொதமொத மக்கள் திலகம் எம்.ஜீ.ஆர் கூட மோதினாரு. திவாலாயிட்டாரு.

அப்புறம் ஒரே உறையில ரெண்டு வாள்னு புலம்பினாரு. தி. மு. க வை ரெண்டாந் தடவ உடைச்சாரு. அம்மாவுக்கு அடிச்சது லக்கி பிரைஸ்.

இப்போ மறு படி சனிச்சுழற்சி .போதாத காலம்போல... சாப்பிடுகின்ற வெள்ளைப் பணியாரத்தில கொழுப்புச் சத்து கூடிட்டாப்போல. அம்மாவுக்கு மீண்டும் லக்கி ப்ரைஸ் அடிக்க்கப் போவுது.

வாய்க்கொழுப்பு காமிச்சு வைக்கோவை அம்மாவிடம் அனுப்பியாச்சு. போகுங்காலத்தில் உட்கார்ந்து போவலாம்னு பார்த்த முதலமைச்சர் சீட்டு கெடைக்கவே கெடைக்காமல் பண்ணிப்புட்டார்.

காமராஜர் சொன்னாப்புல அம்மா படுத்துக்கின்னு இல்லை தூங்கிக்கின்னே ஜெயிக்கலாம்.

கலைஞர் வீரமில்லாத வீர வசனங்களை விடும் வரைக்கும் அம்மா காட்டில செம மழைதான் போங்க.

Friday, January 27, 2006

அழுவாச்சி பாண்டுவும் அழுங்குப் பிடியும்

" காமன்ற் மாடரேஷன்" வாணுமா வாண்டாம்மான்னு ரெண்டு சைடு பிரிஞ்சி போடுற ஆட்டத்தில தமிழ் மணம் பெருங்காய டப்பாவாயிடும்னோன்னு நமக்கெல்லாம் பயம் ஆவுதப்பா...

தலயில முடிகொட்டினவன்லாம் அறிவாளின்னு சந்திர பிம்பம் கட்டிக்கினு பீலா வுடுறாங்க ... சைபர் கிரைம் போனான்களாம் .பொம்பில பொலீசு சுளுக்கெடுக்க கெளம்பிடிச்சாம்ன்னு...

ஒவர் ஆக்ட் பண்ணாதீங்கடா...

மூசா மாமி புல் வெளியில பாண்டு வந்து கத்திக்கினு போவுது ... வெஷயம் தெரியுமா ? போலியா கொட்டம் அடிக்கிற பேமானி தன் சொந்த புளக்கில என்னாமா நல்ல பிள்ளையாட்டமா நடிக்கிரான் பாரும்கிறா..

பாண்டு அவன் அவன் கெடந்து தலை தலையா அடிச்சுக்கினுறான்...

இன்னும் என்னாத்துக்கு அழுவுணி ஆட்டம்..

அவன் யாரு ? அப்பிடின்னு பப்ளிஷ் பண்ணீட்டா ? பிரச்சனை முடிஞ்சுதே....

உமக்கு தெரிஞ்சா .. இன்னும் என்னாப்பா கண் பொத்தி வெளையாட்டு ...

வலைப்பூ மக்களே பாண்டு கிட்ட யாருன்னு கேட்டு ( ஸ்ராங்கா கொன்fபோம் பண்ணிக்கிடுங்கடா) அவன் முத்தம் போய் 4 கேள்வி கேட்டா போச்சூ

இத்தை விட்டுட்டு என்னா ஸ்ரோரி வுடுறீங்கப்பா....

பாண்டு உம்ம நம்பகத்தன்மையை புரூப் பண்ணுப்பா ...

அவன் அவன் வீட்டுப் பொண்ணுங்களைப் பத்தி எழுவுற பயல் தொலைஞ்சான்னு சந்தோஷப் படுவமே....


அப்புறம் என்னாத்துக்கு லேட்டு ஜல்தி கரோ

Thursday, January 26, 2006

கும்பிய குட்டையும் நெத்தியில் பட்டையும்

ஒரு நாளும் இல்லாத தெருநாளா ..... மயிலு வந்துச்சு மயிலு வந்துச்சுன்னு பாண்டு கெளம்பிக்கினாரு..... என்னா வெசையம்னு பாத்தாக்கா அவரு பொலம்பலுக்கு விடிவு வந்துச்சா இல்லை முடிவு வந்துச்சான்னு தெரியாங்காட்டியும் தம்மு தூம்முன்னு குதிக்கிராரு...

போலி போயி சாமி வந்திச்சோன்னு வெசயம் ஜோரா சூடுபிடிச்சுக்கினிது ...
தணிக்கையா ? பராக் பராக்கின்னு வாய்ஸ்ஸு விட்டுக்கினு போயிச்சாம் விங்க்ஸு . பாண்டுவின் அழுக்காச்சி ஆட்டத்துக்கினு ஒரு வக்காலத்தான்னு .......... சிவம் சுந்தரம் பொறப்பட்டாச்சு.

என்னையா கருத்துச் சுந்திரம்னா வீசை என்னா வெலைன்னு கேப்பீங்களான்னு முட்டத்திலேருந்து தேன் குடித்த வண்டு கிர்ரென்னு பறந்து தலை சுத்திப் போயாச்சு.

ஆளாளுக்குன்னு ஞாயமான்னு கல்லுல வெட்டி வெளக்கம் கேட்டுருக்காங்க. பொடி நடையா போனவக வந்தவக எல்லாம் ஜோ ரா பதிலின்னு சூடு ஆறாம பதில் அம்பு வுடுறானுவ.

கெடந்ததும் போய் வந்ததும் போயின்னு சட்டி சுட்டதடா கை வெந்ததடான்னு சன்னியாசம் தலையில கை வெச்சுக்கினு கெடக்கிறாப்ல....

நம்ம போலி கிலி பிடிச்சுதா கலி முத்திச்சான்னு சவுண்டயே காணலை.

சொதந்திரம்கிறாங்க கருத்துன்னுறாங்கா அப்பிடீன்னா என்னான்னு வளா வளா கொளகொளான்னு பிட்டு நோட்டீஸ் விடுறவனுங்க பின்னூட்டம்னு கண்ட மேனிக்கு கதை உடறவங்கள கேக்கணும்னு ரவுசுக்கு ஒரு ஆசை.

இலக்கியம் செய்ய வந்தவனுங்க எல்லாம் அரசியல் பண்ணுர ரேஞ்சில அள்ளி விட்டுக்கிரானுவ..

ஒண்ணுக்கு ரெண்டுக்குப் போறதுன்னாலும் போயித்து வாரேன் போயித்து வாரென்னு பொட்டு பூட்றதுக்கு முன்னாடி பொட்டி பூட்னதுக்குப் பின்னாடின்னு வெளம்பரம் கொடுக்கிறாளுங்க..

மாங்கு மாங்குன்னு எழுதரவங்க மூஞ்சி பாத்தாச்சும் நல்லாருக்குன்னு சொல்ல மனசு வராதவங்கெல்லாம் ஜொள்ளர் ரேஞ்சில மாங்கு மாங்குன்னு பின்னூட்டம் உடுறாங்கோ..

விக்கிரமாதித்யன் கணக்கா ஒரு போலி ஒரு ஒரிஜினல்னு நம்மாளுங்களே எழுதிக்கிராணுங்க ... எழுதுறத எழுதிப்புட்டு அப்புறம் ஆத்தாடி அம்மாடின்னு சவுண்டு உடுறானுங்கோ..

பால் சந்தர் பகல் தூக்கம் கலைஞ்சி போயி லபோ லபோன்னு அடிச்சிக்கினாரு.

நாரதர் கலகம் நன்மைங்கிராப் போல குட்டைய கொளப்பியாச்சு நெத்தியில பட்டையா நாமமான்னு பாத்துக்கினு ரவுசு இருக்கிராப்போல

Friday, January 20, 2006

என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது

தமிழ் மணத்தில சூரியாள் ஒரு தலைப்பு போட்டிருக்காங்க....
நடப்பியல் இயக்கம்ன்னு...

இயக்கம்ன்னா என்னான்னு நமக்கு தலை சுத்திப் போச்சுங்க ... இயங்கிக் கொண்டிருப்பதுதனே இயக்கம். அப்பிடித் தான் இதுநாள் வர நெனைச்சுக் கொண்டிருந்தேங்க. நீங்க இப்பிடி ஒரு போடு போட்டிட்டிங்களே ..... இதில நடந்துபோன இயக்கம் நடப்பியல் இயக்கம் (அதாங்க இப்ப நடக்கிறதுங்க) நடக்கப் போகிற இயக்கம் அப்பிடீன்னு எல்லாம் இருக்குங்களா ? இயக்கம்னாலே நான் ஸ்டாப் தானுங்களே ......

இதில துண்டு போட்டு பாக்கலாமுங்கலா .....

இதில என்னா விசயமின்னா "நடப்பியல் யதர்த்தத்தோடு உடன்படாக் கருத்தை உரைக்கின்ற மொழிகளை விசாரணைக்கு உள்ளாக்குவோம்" னு
தொடங்குறீங்க....

யதார்த்தம்னா என்னா ... நடந்துகினு இருகிர வெஷயங்க... உங்களுக்கு பிடிக்கிதோ இல்லியோ அதெல்லாம் வெஷயமில்ல ..... நடந்து கொண்டிருப்பதெல்லாம் யதார்த்தம் தானுங்க....

சரியோ பிழையோ அத பதிவு செய்வது தான் மொழி....
கருத்து சரியா பிழயான்னு விசாரிக்கலாம்.....
சம்பவம் சரியா பிழையான்னெல்லாம் விசரிக்கலாம்.....

உங்களுக்கு பிழைன்னா மற்ரொருவருக்கு சரியாப் போவுதே .... அவருக்கு சரின்றதை அவர் பதிவு செஞ்சு தானே ஆவணும்....

அப்பிடீன்னா இதிலே விசாரணையே பிழையாவுதுங்களே..

இலக்கியம்னா என்னாங்க.... வாழ்க்கை அனுபவங்கள் இல்லியா ? இலக்கியம். நனவிலி மனசில இருந்து வரணும்னு சொல்லுரீங்க் இலக்கியம் ... அது எப்டீங்க ..... உலகத்தில பாக்கிரது அனுபவிக்கிரது எதும் சொல்லாம ... மயாஜாலக்கதை சொல்லுரதா இலக்கியம்.

வெளங்காத பாமரன்களுக்கு வெளக்கினா புண்ணியமாப் போவுங்க ......


சுத்த இலக்கியம்றீங்க - அது உள்ள படைபாளி வரக்கூடதுங்ரீங்க - படைப்பாளி தாங்க இலக்கியம் படைக்கிறாரு - புத்திமதி சொல்ர வேலையெல்லாம் படைப்பாளிக்கு வேணாம்னா அது சரிததங்க

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் இலக்கியம் வணிக மயமாக்கப் படுவதால் பெண்ணுக்கு நேரும் அவலம்......

என்னென்னவோ சொல்லுரீங்க ..... பாமரனையோ சூத்திரனயோ கூட இலக்கியம் தூக்கி வைக்கலீங்க அது பிழன்னும் சொல்ல முடியாது .....

ஏனென்னா இலக்கியம் அதை சொல்ரவங்களோட கருத்தாத் தான் இருந்து கொண்டிருக்குங்க ....இலக்கியத்தின் தேவையே கருத்துப் பரிமாற்றம் தானுங்க .... யாரோ தன்மனசில இருக்கிறத சொல்லவர இலக்கியம் ஆரம்பிக்குது..........

அத அப்படியே சொன்னமுன்னா டயரிக் குறிப்பு ......
கொஞ்சூண்டு கற்பணை கலந்து கட்டினா இலக்கியம் .... அதை ஏத்துக் கொள்லலாமா இல்லையான்னு முடிவு செய்யிர்ரவங்கா ...... வாசகப் பாமரன்க

கூட்டம் போட்டு ...... யதார்த்த இலக்கியம் ..சுத்த இலக்கியம் ... நனவிலி மனதில தோன்றுவதே இலக்கியம் ... அப்பிடீன்னு சொல்பவங்க இல்லீங்க

நனவிலி மனதில் தோணுவது இலக்கியம்னா அத அக்கு வேறு ஆணி வேரா பிரிச்சுப் பாத்த சிக்மெண்ட் பிராய்ட்டும் இலக்கிய வாதி தாங்க.... அவர அப்பிடி யாரும் கொண்டாடுரது இல்லீங்க ...

வயக்கரயில வண்டி கட்டிப் பாடினதும் இலக்கியம்னு தான் சொல்லுராக..

18 ஆம் நூற்றாண்டில இலக்கியம் முடிஞ்சு போயாச்சு. 50 இல ரெண்டா ஒடைஞ்சு போயாச்சுன்னெல்லாம் ஏதோதோ சொல்லுரீக......

ஏங்க இந்த 'துப்பட்டா ' சண்டை போடுறாங்களே அவங்களும் இலக்கியம்னுதானே சண்டை போடுராங்க..... அப்பிடீ இல்லைங்ரீங்களா ?

அம்புட்டுத்தேன்.... எதென்னா சொல்லுங்க கொஞ்சம் புரியும் படியா சொல்லுங்க .....
புரியாம சொல்லுரது இலக்கியம் இல்லீங்க புரியும் படி சொல்லுரது ... அட்லீஸ்ட் நீங்க என்ன சொல்ல வாரீங்க என்னன்னாவது..... புரிய வாண்டாமோ ...?

சூப்பர் ஸ்டாரு ..... சூப்பர் ஸ்டாரு

ஸ்டாரு ..... ஸ்டாரு ... சூப்பர் ஸ்டாரு கதை சொல்லப் போனாங்கோ ....

அயலூருக் கத அண்டை ஊருக் கத ஆகாசக் கதை எல்லாம் சொன்னாரு .........

ஆனா தன்னூட்டுக் கத மட்டும் அவருக்கு தெரியலியாம்.....

தெரியலியா .... இல்லை விரும்பலியா ....

ஆறு கதையிலியும் அதிஸ்டம் கெடைகலியே .....

மாங்கு மாங்குன்னு எழுதராங்களே வலைப்பூ மக்காள் ...

மக்காள் ....தெரிஞ்சுக்கங்க .... நீங்க எழுதிக் கிழிக்கிரது போதாதுங்க ..... இன்னும் இன்னும் எழுதிக் கிழியுங்கா மக்காள் .....

யாராச்சும் வழிப்போக்கன் வந்து சொல்லுவான் .... நீங்களும் கவிஞர் என்னு .....

ஏனுங்கோ ..... நம்ம மக்களும் கவித எழுதுராங்கன்னாவது தெரியுமான்னு சும்மானாச்சும் கேட்டுக்கிரேனுங்க.....

பேரெடுத்தவன சொன்னா பெருமைதானிங்கோ ......

பேரெடுக்க முட்டியில நிக்கிரவன தட்டிக் குடுக்கிரதிலயும் கவிதை இருக்குதுங்கோ ......

Thursday, January 19, 2006

பாப்புலர் ஆவது எப்டீ ......

வலைப்பூ வில பாப்புலராவணும் என்னா வழின்னு கொஞ்சூண்டு திங்க் பண்ணிப் பாத்தேனா .... ஒண்ணும் கிளிக்காவல்ல......

சரி வலை மேஞ்சு பாக்கலாம் ....ஏதாச்சும் கிளிக்காவாதுன்னு மேய்ய்ஞ்சு
பாத்தா அடேங்கப்பா .... நம்மாளிங்க பலே கில்லாடிங்க....

பாப்புலராவ 108 வழின்னு பொஸ்தவம் போட்ற ரேஞ்சில ஐடியா வச்சிகிறானுவ ........

1. பதிப்ப படிக்கிரீங்களோ இல்லியா காமன்ஸ் சுட்டிய தட்டி 'பலே ..நல்லாச் சொன்னீங்க அப்பிடீன்னு தட்டிடணும் ( அதும் பின்னாடி அவரு நீங்க என்ன புண்ணாக்கு பதிவு போட்டாலும் வந்து ஒரு குத்து போடுவாரு )

2.ஜோராக்கீதப்பா .... அந்தா மூணாவது பந்தில சொல்லுரதில ஒடன் பாடில்லீப்பா அப்பிடீன்னு தட்டி உடணும் ( படிச்சுப் பாத்தவனுங்கெல்லாம் ஆளாளுக்கு தலைய பிச்சுக்கிடுவானுங்க )

3. இல்லீனா வடிவேலு கணக்கா குண்டக்க மண்டக்கன்னு பதில் போட்டுடணும்.

4. யாராச்சும் அப்போ அப்பிடீன்னிங்க இப்போ இப்பிடிச் சொல்லீரீங்கன்னா
இதுதான் அது ...... அதுதான் இதுன்னு கவுண்டமணி செந்தில் கணக்கா பீலா வுட்டுக்கலாம். ( பின்னாடி வாரவங்க இலக்கிய சர்ச்சை அப்பிடீன்னு வாய் மூடாம பாத்துப்பாங்க கொஞ்சம் துடியானவங்க ஒங்களை ஆதரிச்சு இல்லே எதித்தாவது ஏதாவது எழுதிப்புடுவாங்க)

5. அப்புறம் நீங்க எங்கை போனாலும் உங்க பின்னாடி ஜேஜேன்னு கூட்டந்தான் போங்க

6. இல்லேன்னா வெளங்காத மூணு நாலு வார்த்தைங்களை வச்சி கடாசிக்கிட்டிருக்கணும். இஸம் ,பூர்ஷ்வா. பின்னவீனத்துவம், முன்னவீனத்துவம் இல்லாங்காட்டி பெண்ணிலை வாதம் தலித்து அப்பிடீன்னு அடிக்கொரு தரமாச்சும் பாவிக்கணும்.

7. இல்லாங்காட்டியும் தாப்பான் மாப்பான் சீத்திரன்னு சேறு வீசணும்.

8. இல்லாங்காட்டியும் அந்தப் பதிப்பூ என்னோடதில்லீப்பா .. போலி உட்டது அப்பிடீன்னு கலாய்க்கனும். ( அது பாத்ததும் அனுதாப அலையில் அப்பிடியே அள்ளிக் கிடனும்.)

10. அதும் இல்லீனா நம்ம வழி தனி வழீன்னு செரிக்க கஸ்டமான புளிச்ச கதங்க உடணூம். அடிகடீ மார் தட்டி தொடை தட்டீ கீச்சுப்புடுவேன் ரேஞ்சில உதார் காட்டணும்.


இப்போதைக்கு இம்புட்டும் போதுங்க...

போதல்லீன்னா மல்லி தழைன்னு தனிப்பதீவு போட்டு தரம் பிரிக்கிரேன் பேர்வழின்னு உட்லாலங்கடி உடணும்.

அதும் இல்லாங்காட்டி நம்மள போல ரவுசு உடனும்.


சரீங்ங்களா ........

" பூ" போடுதல்

வலைப்பூ வில சும்மாங்காட்டியும் பதிவ கூட்டணும்னா..... நெறைய ஐடியா...
வைச்சுகினு கீராங்கப்பா......

ஏதாங்காட்டியும் மூணு சொய்ஸ் எடுத்துடனும்....

தமிழ்மணத்தில.... 1. மணம் வருமா ?

2. மணம் வராதா ?

3. மணம் வரவே வராதா ?

அப்பிடீன்னு பில்டப் பண்ணிக்கிடலாம். தலப்பில மட்டும் கொஞ்சூண்டு சஸ்பென்சு வைச்சிடனும்.


டிக் ... டிக்... டிக் .... அல்லாங்காட்டி

குஷ்புவும் ஒரு டிக்கும் .........

அப்பிடீன்னு கொஞ்சம் திரில் பூசி படக் படக் ரேஞ்சில பாத்துக்கிடனும்.

என்னமோ ஏதோன்னு வந்து பாப்பாங்க .....

கவுண்டர் கிர்ர்ர்ர்ர்ரின்னு சுத்திக்கும். நம்ம காதும் சுத்திக்கும் பூவு.

அல்லாங்காட்டி,

பிச்சமணியின் " பிஸ்தா பம்மலுக்கு " கிச்சாவின் பதிலடி அப்பிடீன்னாலும் பிச்சுக்கினு கொட்டும்.


கொஞ்சூண்டு ரைமில தமிழ் வளக்க .... வலைப்பூ மேயன்னு வாரவங்க எல்லாம் ...... ஹி....ஹி


இல்லாங்காட்டி, போலி " டூண்டுவின் பொம்மலாட்டம் " அப்பிடீன்னு பக்கம் பக்கமா பீலா உடலாம்.


படிச்சு முடிச்சீங்கன்னா ஜென்மம் சாபல்யமாயிடும் ........

டெஸ்டு கண்ணா டெஸ்டு

கத வுடாதீங்க

" கதை கரு பற்றிய இன்னொரு விஷயம். அன்றாடத் தினசரிகளில் பிரபலமாக வெளிவந்து எல்லோருக்கும் பரிச்சயமான 'பத்திரிகைச் சமாசாரத்தை' சிறிது ஜோடனை செய்து கதையாக உரு மாற்றும் ரசவாதம் செய்து உலவவிடுவது. இதை 'கதை எழுதுவது' என்பதை விட 'கதை விடுவது' என்று சொல்லலாம். நிருபராய்ப் போய் விஷயத்தை துருவித் தோண்டி உண்மையை அகழ்ந்தெடுத்தல் உன்னதமான பத்திரிகைத் தொழில். மேம்போக்காக பத்திரிகையில் வெளிவந்த செய்தியை வைத்துக் கொண்டு ககது , மூக்கு, கண் வைத்துக் கதை விடுதல் வேறு வகை. பல வருஷங்களின் பின் வரும் வாசகர்கள் பத்திரிகைச் செய்தியை அறியாமல் , கதை கருவை ஆசிரியரின் அபார கற்பனைத் திறன் என்று அப்போது படிப்பவர்கள் நம்பிவிடலாம். அவர்கள் அப்படி நம்பி விடவேண்டும் என்னும் நப்பாசை ஆசிரியருக்கு இருக்குமானால், அவர் தன் உயிலில் 'இந்தக் கதையை இத்தனையாவது ஆண்டில் பிரசுரம் செய்க, அல்ல்து இத்தனையாவது ஆண்டுக்கு முன் பிரசுரம் செய்யற்க' என்று எழுதி வைத்துப் போகவேணும்.


இப்டிக் கத உடுறதில சில மாமிங்க பலே பேர்வழிங்க. உஷார்...... உஷார்

எது எழுத்து

"நம் வாழ்க்கை அவசரத்தில் காணாது விட்டு விட்ட கண்டும் இனம் காணாது விட்டுவிட்ட சில குறிப்பிட்ட கணங்களை, நிகழ்ச்சிகளை அநுபவங்களை நம் கண்ணுக்கு முன் கொண்டு வந்து நிறுத்தி அவற்றுள் புதைந்து கிடக்கும் புதுமைகளை, உண்மைகளை வெளிக்கொணர்ந்து நம் கவனத்தில் நிலை நாட்டுவது தான் எழுத்துக் கலைஞனின் வேலை "

மட்டுந்தாங்க, எழுத்தாள /எழுத்தாளினிங்க வேலை. சும்மானாச்சும் புத்திமதி சொல்ரதில்லீங்க....


"வாழ்க்கை அநுபவமும் கற்பனைத்திறனும் சேர்ந்த அகவாழ்வு என்னும் உலைகளமும் வாசகர் ஒவ்வொருத்தரும் கதையைப் படிக்கும் போதும் படித்து முடித்த பின்னாலும் அவர்கள் மனதில் ஏற்படும் உணர்ச்சி அலைகளும் அவற்றை உந்திவிடும் வாழ்க்கை அநுபவமும் கற்பனைத் திறமும் ஒண்ணாக ஒரே மாதிரியாக இருக்கமுடியாது"

ஆமா சரிதாங்கேய்.......

வந்துட்டேன்

ரவுசு வந்துட்டேங்... வலைப்பூவுல சுளுக்கெடுக்க ரவுசு வந்துட்டேங்...