Sunday, November 29, 2009
குமுதமும் ஒரு " ஜோக்கரும்"
குமுதம் ஒரு மஞ்சள் பத்திரிகை என்பதைப் படித்து இரசித்தவர்கள் அறிவார்கள். அவர்களின் இலக்கிய சேவையே பைசா சம்பாதிப்பதையே ஆணி வேராகக் கொண்டு இயங்குவதை அனைவரும் அறிவோம். பிரியாமணியின் பிராவின் பட்டையை போக்கஸ் பண்ணிப் போடுவதால் எகிறப்போகும் விற்பனையைப் பற்றி அவர்கள் நன்கு அறிந்தே வைத்திருக்கின்றார்கள்.
வாசிப்பு என்பது இலக்கியம் சார்ந்ததாகவே எப்போது இருக்க வேண்டும் என்று ஏதாவது நிபந்தனை இருக்கின்றதா? என்ன? அப்படியே ஒரு நிபந்தனை இருந்தால் வாசிப்பவர்கள் அரைவாசிப்பேர் காணாமல் போய் கடற்கரை ஓரத்தில் கடலை போட்டுக்கொண்டிருப்பார்கள். இணையத்தில் ப்ளாக்குகளில் எல்லாம் எழுதிக் கொண்டிருப்போர் எல்லாம் என்ன? இலக்கியத்தைக் காக்க வென்று சபதம் போட்டு வந்தவர்களா என்ன?
குசும்பு ,மொக்கை,சக்கை என்று படு ஜோராக படங்காட்டிக் கொண்டிருப்பவர்களிடமெல்லாம் இலக்கியம் வீசை என்ன விலை என்று கேட்டுப் பாருங்கள். ரூபாய்க்கு மூன்று என்று சொன்னாலும் சொல்லுவார்கள். இவர்களெல்லாம் ஏதோ தங்களால் முடிந்த எலக்கிய சேவை செய்ய வந்தவர்கள் என்பதே பெரிய விசயம். இப்படிப்பட்டவர்களுக்கு அறிவும் அனுபவமும் கொடுக்கவென்றே முன்னோடியாக வெளிவரும் பத்திரிகைகளே குமுதமும் ஆனந்த விகடனும்.
இதை அறிந்தவர்களே அனுபவப்பட்டவர்களே தங்கள் பதிவுகள் குமுதம் ஆனந்த விகடனில் வந்து விட்டால் நாலு கட்டம் கலரில் கட்டி "நன்றி" அறிக்கை விடுகின்றார்கள். அவர்களின் பிறவிப்பயனே ஈடேறியதாகக் கொண்டாடுவது இதனால் தான். அவர்களின் இலக்கும் இலக்கிய சேவையும் இதக் குறித்தே இருப்பதால் அவர்களுக்கு உண்டாகும் சந்தோஷத்தை தட்டிப் பறிக்க நாங்கள் யார்?
இந்தப் பத்திரிகைகளில் கூட வரமுடியாத எழுத்துக்களின் சொந்தக் காரன் சாரு நிவேதிதாவிற்கு "இந்தப் பழம் புளிக்கும்" நரியின் நிலை தான். யாரோ தன்னை "ஜோக்கர்" என்று எழுதி விட்டார்களாம். தமிழ் வாசிப்பாளர்களின் உலகம் அப்படித்தானே கட்டம் கட்டி வைத்திருக்கின்றது.
கேரளத்துப் பெண்களின் வனப்பு பாரதியாரைக் கூட சுண்டியிழுத்ததெனில் நாமெல்லோரும் எம்மாத்திரம். "சிந்து நதியினிசை நிலவினிலே... சேர நல் நாட்டிளம் பெண்களுடனே.." நாமுமென்ன அவருக்குக் குறைந்தவர்களா என்ன? நயனின் நயனத்தைத் தவிர எல்லாவற்றையும் அக்குவேறு ஆணி வேராகப் பிரித்து மேய்ந்து தானே நம் கனவுகளைக் கலர் புல் ஆக்குகின்றோம்.நமக்கே இப்படியென்றால் முற்றத்து மல்லிகையின் வாசனையை நாளும் சுவைக்கும் மலையாளிக்கு சாரு நிவேதிதாவின் மஞ்சள் கதைகளான அர்த்த ஜாமக்கதைகள் பிடித்துப் போனதில் என்ன தவறிருக்க முடியும்.
"வேலிக்கு ஓணான் சாட்சியாம்" தான் ஒரு மஞ்சள் பத்திரிகை எழுத்தாளன் என்பதற்கு அவர்கள் சாட்சி சொல்வார்களாம். அதைதானே நாங்களும் ஒத்துக் கொள்கின்றோம். கதை அப்படியிருக்க ஸ்டாக்ஹோம், சர்வதேசத் தரம், இலக்கியப் பரிசு என்று பீலா விடுவதை ஜோக்காக எடுத்துக் கொண்டு ஜோக்கர் என்று கூறுவதில் தவறென்ன இருக்கின்றது.
ஆனந்தவிகடன், குமுதம் மட்டுமா ? தினமணி, தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களும் அதைத் தானே செய்கின்றன. சினிமா நடிகைகளின் படங்களைப் பார்த்து "வாணி" வடிக்கும் இளைஞர்களே கிழக்கிலிருந்து மேற்கு வரை நீண்டு இருக்கின்றார்கள். அப்படி இருப்பது ஒன்றும் தவறில்லையே. இயற்கையான விடயமும் அது தானே. மனிதன் ஒரு விலங்கு என்பதை நாம் அடிக்கடி மறந்து போவதன் வினை தான் இது.
இயற்கைக்குத் தேவை ..இனப்பெருக்கம். அது இல்லையென்றால் இயற்கையே அழிந்து விடும். தமிழர்கள் மிருகங்கள் போல் கொல்லப்படும் போது மிருகமாகவே இருந்து மிருகமாகவே சிந்திக்கத் தலைப்பட்டு அதனாலேயே "பலாத்காரத்தின் தோல்வி" பற்றி விஸ்தாரமாக "நொண்ணை"எழுதிய சாரு நிவேதிதா இப்போது எப்படி இயற்கையை மறுதலிக்கலாம்.
மனிதனின் இயற்கைக் குணம் சீண்டுவது,சினப்பது,முட்டுவது குட்டுவது. அதைத்தானே அவர்கள் செய்கின்றார்கள். இவர் கூறும் "இலக்கியப் பிம்பம்" இவர்களாகவே சட்டம் கட்டிக் கோடு போட்டு வீட்டில் மாட்டி வைத்திருக்கும் மாயமான் அன்றி வேறென்ன?
இறந்துபோன தன் மனிதர்கள் பற்றிய இரக்கத்தை வெளிப்படுத்தவே மற்றவர்கள்(புலிகள்) விட்ட பிழைகளை அளவு கோலாகக் கொண்டவர்கள், கொண்டாடியவர்கள் எப்படி சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்.
இலக்கியப்பிரமாக்கள் தேவையே இல்லாத சாதாரண மனிதர்களையே கோரும் ஒரு சமுதாயத்தில் மனிதனாக இருக்க முடியுமா? என்று இவர்கள் யோசிக்கட்டும். அதன் பின்னால் ஸ்டாக்ஹோம் , சர்வதேசத் தரம், இலக்கியப் பரிசு பற்றியெல்லாம் யோசிக்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Super view,
yes fely like laughung with.... that baru's comment that kumudam chose as if any kisu kisu about him will lift the sales.he was talking about the magazine in a low manner using sexy picyures of actress which did not bring sales up. When his interview was published in Kumudam did he forget the standard of kumudam, really funny fellow talking about so many world standard literatures prizes. If he is really committed abpout his goal would not even care to write about kumudam has real maturity.
Post a Comment