Sunday, November 29, 2009
கண்ணைக் கசக்கிக் கொண்டிருக்கும் அபி அப்பா
தி.மு.க வின் வலக்கை, இடக்கை, உலக்கை இவர் என்பது உலகப்பதிவர்கள் அனைவரும் அறிந்ததே. பதிவுலக மகளிரைக் கூட ஒரு சந்தர்ப்பத்தில் கருப்புக்கண்ணாடி கருணாநிதியின் கட்சிச் செல்வாக்கைக் காட்டி மிரட்டித்திரிந்த்வர் இவர் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். சைபர் கிரைம் பிராஞ்ச் போன்ற சதுர் கச்சேரிகள் பல காட்டி பெரிய அளவில் "படங்காட்டியவர்" இவர் என்பது பதிவுலகம் அறிந்ததே.
எண்ணெய்க்குடா நாட்டில் பொட்டி தட்டும் இவர் தமிழ் இலக்கணவாதியின் பெயரையும் கொண்டவர். ஷென்ஷி போன்ற ஒரு சில எதிரிகளையும் குசும்பன் போன்ற ஒரு சில காமடியன்களையும் எப்போதும் அருகிருத்திக்கொண்டிருக்கும் இவர் எல்லோருக்கும் நல்லவரே.
இப்போது மாயாவரத்தில் டேரா அடித்திருக்கும் இவரும் தி. மு.க வில் எழுந்திருக்கும் புகைச்சலில் அகப்பட்டு கண்ணைக் கசக்கிக் கொண்டிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகின்றது.
ஆளைப்பார்த்து வயதைக் கணிக்க முடியாத மார்க்கண்டேயத் தோற்றமும் டூ இன் வண் கண்ணாடியும் அணிந்திருக்கும் இவரும் இந்தச் சுழலில் அகப்பட்டிருப்பாரா? என்று உறுதிபடக் கூற முடியாதிருக்கின்றது. (வயது தெரியாததால் வந்த வினை.. குட்டி குட்டியாக இருக்கும் அவர் பிள்ளைகளும் இவரை அந்த அளவிற்கு சீனியராக்க முடியாது தடுக்கின்றனர்)
சரி இனி நியூஸ்: "தலைமுறை, தலைமுறையாக தி.மு.க.,வில் இருக்கிறோம். கட்சிக்காக பலமுறை ஜெயிலுக்கும் சென்றுள்ளோம். ஆனால், எங்களை யாரும் வந்து பார்க்காமல் அலட்சியப்படுத்துகின்றனர் புதிதாக பொறுப்புக்கு வந்துள்ளவர்கள்' என வெளிப்படையாகவே புலம்புகின்றனர் "சீனியர்' பிரமுகர்கள்.
இது குறித்து, மூத்த தி.மு.க., பிரமுகர் ஒருவர் கூறியதாவது:நான், 30 வருடங்களாக கட்சியில் உள்ளேன். கிளை, ஒன்றிய, மாவட்ட பொறுப்புகள் பல வகித்தவன். கட்சி அறிவித்த போராட்டங்களில் கலந்து கொண்டு 39 முறை ஜெயிலுக்கு சென்று வந்தேன். இப்போதும் முக்கிய பொறுப்பில் தான் உள்ளேன். ஆனால், தேர்தல் தேதி அறிவித்தும், இதுவரை யாரும் என்னை வந்து சந்திக்கவில்லை. என்னைப் போன்ற சீனியர்களிடமும், ஆதரவு கேட்டு வரவில்லை.நாங்கள் கட்சிக்காக உழைத்து, கட்சி வளர்க்க பாடுபட்டோம். சாகும் வரை கட்சியில் தான் இருப்போம். புதிதாக பொறுப்பில் வந்தவர்கள் பற்றி தலைமைக்குத் இது தெரியுமா என்பது தெரியவில்லை. தொகுதியில் மட்டுமல்ல, மாவட்டம் முழுவதுமே இதே நிலை தான். அமைச்சருக்கு இது தெரிந்தும், அவர்களுக்கு "சப்போர்ட்' செய்வதால் எங்களுக்கு தொடர்ந்து அவமானமே ஏற்படுகிறது.இவ்வாறு அந்த பிரமுகர் வருத்தத்துடன் கூறினார்.
அபி அப்பாவின் மனதைத் திருடிய "கள்ளி"
குறிப்பு:1. தறுதலை தலைவனைப் பின்பற்றும் எவருக்கும் வாய்ப்பது தான் இந்த இழி நிலை என்று நீங்கள் புலம்புவது சத்தியமாக எனக்குக் கேட்கவில்லை.
2. கலியாணச் சாப்பாட்டைக் காட்டி கடுப்பேற்றியதற்காக ஒரு "ப(லி)சி வாங்கல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment