Monday, November 30, 2009

இடையில் நெளியும் உயிரினமான விலாங்கு


அபி அப்பா பற்றி ஒரு பதிவு போட்டிருந்தேன். அதில் சுவையான விடயம் என்னவென்றால் ஒரு பிளஸ்ஸும் ஒரு மைனஸும் மட்டுமே விழுந்திருந்தது. அந்த பிளஸ் நான் போட்டதே.. என் பதிவுகளுக்கு நானே பிளஸ் போடவில்லையென்றால் என் பதிவுகளை மெச்சிக் கொள்வது எவ்வாறு? அதே நேரம் அப்பதிவிற்கு விழுந்திருந்த மைனஸ் எப்படி விழுந்திருந்தது ? யார் போட்டது என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி. இப்படியொரு "மில்லியன் டாலர்" நிகழ்ச்சி நடக்கப்போக இந்தச் சொற்றொடரும் வாழ்க்கையில் வியாதியாகத் தொடர்கின்றது. இந்தியில் நடக்கும் குரோர் பதியைப் போல. "ஸ்லாம் டாக் மில்லியனருக்கு" கருவைக் கொடுத்தது போல.

மைனஸ் புள்ளி அபியின் அப்பாவால் விழுந்திருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் என்று வாதாட இந்தப் பதிவுலகத்தில் அதிகம் பேர் முன்வரக்கூடும். நான் எப்போதும் இப்படியான சாத்தியங்களை கருத்திலேயே எடுப்பதில்லை. ஏனென்றால் என் மனதில் உள்ள கருத்துக் கந்தசாமி போன்ற பிம்பங்கள் உடைந்து போவதில் எனக்கு விருப்பம் இருப்பதில்லை. உப்புச் சப்பில்லாமல் உடைந்து போகும் சிறு பிள்ளைத்தனமான விவாதங்களிலும் அதிகம் நாட்டம் கிடையாது.

உண்மையில் இங்கு அபி அப்பாவிற்கு புள்ளி போட நினைப்பதை விட ஒரு புள்ளியில் உட்கார்ந்திருந்து சங்கடப்படுதலே அதிகம் சாத்தியமாகி இருக்கும். ஏனெனில் அவரின் இருப்பு பற்றி அவர் ஒரு இருண்ட குகையில் இருந்தே நீச்சலடிக்கும் குணம்சத்துடன் இருந்ததாக அவரின் அசைவுகள் நிரூபித்திருந்தது. இந்தப் பரந்த உலகில் அவரின் குணாம்சங்கள் கருப்புக் கண்ணாடி கழட்டாத கருணாநிதியின் மொக்கையில் ஊறிய திருட்டுக் குணத்தின் அடியொற்றியதாகவே வெளிப்பட்டிருந்தது.

கட்சி அரசியல் பிச்சை அரசியல் என்பதைப் போதனயாகவும் வாழ்வாதாரமாகும் கொண்டிருந்த அவர் போலொத்தவர்கள் அவ்வாறு சிந்திப்பது அவர்களின் தவறல்ல. ஒரு புரட்சி வாதியாக அவரை நினைத்துப் பார்ப்பதே பெரும் முட்டாள்தனம். அப்படிப்பட்டவர் சைபர் கிரைம் , தீபா போன்ற பெண்களுக்கெதிரான உட்டாலக்கடி போன்ற வில்வித்தைகளைக் கட்டவிழ்த்து விட்டதையும் சென்ஷி போன்றவர்கள் உதிரம் கொதித்து துள்ளிக்குதித்ததையும் புறங்கையால் ஒதுக்கித் தள்ள வேண்டியது தான்.

ஆனால் குசும்பன் போன்ற இடையில் நெளியும் உயிரினமான விலாங்கு வகையறாக்கள் அதற்கான தலையீடுகளில் உத்தரவாதத்தை நிறைவேற்றாதது இன்னும் மனதைக் குடைகின்றது.

தன்னால் முடியாத விடயங்களில் தடக்கி விழும் இக்குணாம்சத்துடன் இயங்கும் இவர்கள் இவ்வகையாக ஒரு மைனஸ் போடுவது எதிர்பார்க்கக் கூடியதே.

இவர்கள் எதைப் புடுங்கி சாதிக்கப்போகின்றார்கள் என்பதை அவர்களே விரைவில் தெளிவு படுத்துவார்கள். இவ்வகையான குசும்புகள் சாரு நிவேதிதாவின் இலக்கிய மேம்பாட்டுக்காவலர்களாகக் காட்டிக்கொண்டு சீரழிக்கும் போக்கிற்குச் சற்றும் குறைந்ததல்ல. அடிப்படையில் ஒரு ஆரோக்கியமான விவாதக் களமாகக் கூட "புளக்கியம்" இருப்பதை அனுமதிக்க மறுக்கின்றார்கள் என்பதே பெரும் துயரமாகும்..

No comments: