மனிதர்கள் தெரிந்தோ தெரியாமலோ தவறு விடுகின்றார்கள். தமக்கு சம்பத்தப்படாத விடயங்களில் தலையிடுவதோடு மற்றவர்களைக் காயப்படுத்தவும் தயங்குவதில்லை. அந்த வலியும் வேதனையும் தமக்கு தமக்கு வரும் வரையும் அதைத் தவறென்றே உணருவதில்லை. இலவச ஆலோசனைகளை அள்ளிவிட்டுக்கொண்டிருப்பார்கள். அதில் ஒரு குரூர மகிழ்ச்சியும் அடைவார்கள்.
அப்படியொரு குரூர மகிழ்ச்சிதான் அந்த அழகிய காதலைப் பிய்த்துப் போட்டது. இரண்டு மனங்களை ரணகளப்படுத்தி விட்டது. இருவரை நடைப்பிண்மாக மாற்றி விட்டது.
'அழகான சிறு குருவிக் கூடாக கட்டியிருக்கும் இந்தக் காதலைக் குலைத்துப் போடாதீர்கள் கலைத்துக் போடாதீர்கள்.." என்று அவன் எழுதிப் போட்ட கடிதம் கன்ணீரில் கரைந்து போயிருக்கலாம். அல்லது கால்களில் தேய்ந்து போயிருக்கலாம்.
இன்று அந்த பென்ணின் தந்தை இல்லை. சமூகத்தின் எந்த நடைமுறைகளைக் கட்டிக்காக்கவென்று செயற்பட்டாரோ அவையெல்லாம் வெறும் சடங்காகவே சீரழிந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த இருவரும் இருந்து கொண்டிருக்கின்றார்கள். ஏதோ ஒரு திசையில் ஏதோவொரு நினைவில் காலங்களைத் தள்ளிக்கொண்டிருக்கின்றார்கள். கூடவே சாட்சியமாக இந்த டாக்டரும்.
அந்த அழகான காதல் கதையை நினைக்கையில் கூடவே கண்ணீரும் வந்து கல்ங்கிக்கழிகின்றது. காதலின் இனிமையைச் சொல்வதா? நிறைவேறாது போன துயரத்தைப் பகிர்ந்து கொள்ளவா? வலி சுளீரென்று உயிரைக் குலைக்கின்றது. இரண்டு வாழ்க்கை அழிந்து போன,அழிக்கப்பட்ட சோகம் துரத்துகின்றது. இருந்ததோ ஒரு வாழ்க்கை. அதன் பின் விட்ட தவறுகளைத் திருத்த யாரால்தான் முடியும்.
தனக்கு வலுக்கட்டாயமான நிச்சயயதார்த்தம் முடிந்து விட்டது என்று அந்தப் பெண் எழுதிய கடிதம் இன்றும் அவன் இதயத்தில் முட்களாக நெருடிக்கொண்டிருக்கின்றது. "ஐயோ நான் இழக்கக் கூடாத செல்வம் நீ.." என்று அவன் இதயம் இன்றும் கதறிக் கரைந்து கொண்டிருக்கின்றது.
அந்தக் காதலைக் கசக்கிப் போட்ட நீங்களும் உங்கள் கொள்கைகளும்..... நல்லாருங்கடே
(கண்களின் கண்ணீர் தொலைந்து விட்டால் இன்னும் தொடரும்)
Thursday, November 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment