Wednesday, November 25, 2009

தமிழ் மணம் வெட்கப்பட வேண்டும்


ஒரு அழகான காதல் கதையை கலைத்துப் போட்ட ஒரு சாதி வெறி பிடித்த டாக்டரை நட்சத்திரமாக்கியதற்காக தமிழ் மணம் நிச்சயம் வெட்கப்பட்டே தீர வேண்டும். அப்போதெல்லாம் அவர் பருத்தித் துறையில் பிறைவேற் கிளினிக் வைத்திருந்த பிரபல குள்ள டாக்டர்.

நாங்களும் தான் அங்கு எத்தனையோ முறை போய் காசைக் கொட்டியிருந்தோம். ஆனாலும் பணம் கறக்க விரிந்திருந்த பேராசை பிடித்த மனம் மக்களை மக்களாக மதிக்க விரிந்திருக்கவில்லை.

அந்த அனுபவத்தைத் தான் இங்கு விரிவாக உங்கள் முன் விரித்திருக்கின்றேன். அது ஒரு அழகான காதல் கதையாக இருந்த வேளை ஆபத்தானதாகவும் இருந்தது. காதல் வானில் சிறகடித்த சிட்டுகளுக்கு சமூகத்தின் கசடுகளைப் பற்றி சிந்திக்க ஏது நேரம். மணலைக் கயிறாகத் திரிக்கவும் வானத்தை வில்லாக வளைக்கவும் கற்பனை செறிந்த கனவுலகம் விரிந்து கிடந்ததே.

கற்பனைகளில் கூடு கட்டி என்னவொரு சுகமான வாழ்வில் அவர்கள் திளைத்திருந்தார்கள். ஆவாரம் பூவின் பெயரில் தொடங்கும் ஊரில் சைவர் சாதியில் பிறந்த அந்தப் பெண்ணை டாக்டரின் அயலூரவனான அந்தப் பையன் காதலித்ததும் கற்பனையில் மிதந்ததும் என்ன உலக மகா பாதகமா?

பெண்ணின் காதல் அறிந்த தந்தையார் தேடிப்போனதும் விபரம் கேட்டதும் இந்த டாக்டரைத்தான். அவர் சொன்னது "இந்த ஊரில் அந்தப் பெயரில் யாரும் இல்லை,சுத்தியிருக்கும் பள்ளோ நளமோ கரையானோ... எதற்கும் பிள்ளையைக் கவனமாகப் பாத்துக்கொள்ளுங்கோ.."

பெண்ணின் தந்தை "நல்ல மாட்டுக்கு ஒரு சூடும் நற்பார்த்தைக்கு ஒரு சொல்லும்" என்று எழுதி அந்தக் குருவிகளின் கூட்டைச் சிதைத்துப் போட்டதும் அந்தப் பெருமையைச் சூடிக்கொண்டதும் இந்த டாக்டரே.

மனிதரை மதிக்காதவன் டாக்டராய் இருந்தால் என்ன? தேவனாய் இருந்தால் என்ன?


குறிப்பு: இந்த டாக்டரைப் பற்றி இன்னும் நிறையவே கதைகள் இருக்கின்றன. தெரிந்தவர்கள் எழுதவும்.

2 comments:

கோவி.கண்ணன் said...

அவரின் எழுத்தில் எதேனும் மாற்று கருத்து இருந்தால் விமர்சனமாக வைக்கலாமே,

குற்றச் சாட்டுகள் என்றால் ஆதாரத்துடன் சொல்லலாமே, எங்கோ எவரோ சொன்னார்கள், கேள்விப்பட்டேன் என்பது போல் ஒரு மனிதரை காயப்படுத்திவிட்டு, பிறகு அப்படி எதுவுமே நடந்திருக்கவில்லை என்று அறியும் போது மன உளைச்சல் யாருக்கு ?

அதுமட்டுமில்லாமல் 'தமிழ்மணம் வெட்கப்பட வேண்டும்' என்று கூட சொல்கிறீர்கள் ஏன் ? தமிழ்மணம் நட்சத்திரமாகும் பதிவர்களின் பின்புலன் பார்த்து தான் நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கனுமா ? அது எப்படி சாத்தியமாகும் ?

இப்ப இட்டாலி வடைங்கிற பெயரில் எழுதுறிங்க, மற்றபடி நீங்க யாருன்னு யாருக்கும் தெரியாது, நீங்கள் நட்சத்திரமாக தேர்ந்தெடுத்தாலும் தமிழ்மணம் தவறு செய்துவிடது என்று பதிவர்கள் நினைக்கனுமா ?

இட்டாலி வடை said...

வாருங்கள் கோவியாரே!

காயப்பட்ட ஒரு மனதின் கதறல்தான் இந்த எழுத்து. வேண்டுமென்று யாரையும் காயப்படுத்தும் என்ணம் கிடையாது. ஆதாரம் இல்லாத எழுத்து இதுவல்ல.