Wednesday, April 01, 2009

இந்தியாவை அலட்சியம் செய்


இன்று வன்னி மண்ணில் அபிஷேகிக்கப்படும் அத்தனை ஈழத்தமிழ் இரத்தத்தில் இருந்தும் நாம் ஓர் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழ் ஈழம் தான் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு வழி வகுக்கும். அதை நாம் அடைந்தே தீருவோம் என்பதுவே அது.

அதை அடைவதற்கு இன்று பெரும் தடையாக இருப்பது இந்தியாவின் அகன்ற பாரதக் கனவு. இவ்வரசியல்க் கனவிற்கு பின் துணையாக நின்று ஊக்கப்படுத்துவது இந்தியப் பெரும் முதலாளிகளின் பரந்த ஏகோபித்த சந்தை வாய்ப்பைப் பெற்றுக் கொள்வது என்பது. இதை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய உலக ஒழுங்கு அவ்வாறு தான் உலகை வழி நடாத்துகின்றது.

இத்தகைய பேராசைகளுக்கு முன்னால் மனிதம் இரக்கம் என்பதெல்லாம் அடிபட்டுப்போகும். அது ஒரு செல்லாக்காசு. செத்துக்கொண்டிருப்பவர்கள் பற்றி நின்று நினைக்க இங்கு யாரும் தயாராகவில்லை. எல்லோரும் மனம் மரத்துப் போயிருக்கின்றார்கள்.தங்கள் சுய ஆசைகள் நிறைவேற கொல்ல முடிந்த அளவு மக்களைக்கொல்லுதல் அல்லது அதனிலும் கூடக் கொல்லுதல் என்பது அவர்களைப்பொறுத்தளவில் ஒன்றும் பாவமில்லை.அது தான் உலகில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இன்று உலக நாடுகள் அனைத்தும் இத்தகைய ஒரு சமன் பாட்டின் அடிப்படையிலேயே 8இயங்கிக் கொண்டிருக்கின்றன.

உலக வல்லாதிக்க நாடுகள் தான் இன்று சர்வதேச சமூகமாகத் தங்களைச் சொல்லிக்கொள்கின்றன. உலகில் பல நூற்றுக்கணக்கான நாடுகள் இருக்கும் பொழுது சில பத்துக்கணக்கான நாடுகள் தானா சர்வதேச சமூகம். இவையே இன்று உலகைச் சுரண்டிக்கொளுக்கும் நாடுகள். இவற்றின் நலன்களே இன்று உலகின் நலன்களாகவும் ஜனநாயகமாகவும் போதிக்கப்படுகின்றது.

இவற்றிற்கெதிரான விருப்பங்கள் எண்ணங்கள் பயங்கரவாதமாகப் படங்காட்டப்படுகின்றது. புஷ்ஷின் காலத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு கற்கால நாகரீகத்திற்கு இன்று மனிதனைக் கொண்டு சென்றிருக்கின்றது. அதை உணர்ந்ததனாலேயே இன்று அந்த நாடுகளில் இருக்கக்கூடிய சாதாரண சிந்தனை கொண்ட மக்களாலேயே அருவருப்புடன் பார்க்க நேர்கின்றது. தங்களை இழிபிறவிகளாகவே உணரமுடிக்கின்றது. அமெரிக்கவர்கள் சிறந்தவர்கள் என்ற மமதைக்குக் கிடைக்கப்பெற்ற பெரும் அடியாக உணருகின்றனர். அதற்குப்பிராயச் சித்தமாகவே கருப்பினத்தவர் ஒருவரை தங்கள் தலைவராக்கி திருப்திப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். ஆனாலும் இன்னும் தங்களைப்பற்றிய அருவருப்பான எண்ணத்தில் இருந்து வரமுடியாது தவிக்கின்றனர். இன்னும் ஏதாவது செய்ய வேண்டுமெனத் துடிக்கின்றனர். மக்களின் இந்த மனநிலையை ஆட்சியாளர்களும் உணர்ந்திருக்கின்றனர்.

அதனால் இவர்களை மீறி வேறு போர்கள் உற்பத்தி செய்யப்படமாட்டாது. ஆனாலும் உலகத் தனி வல்லரசுக்கனவு அமெரிக்காவிற்கு எப்போதும் போகாது. அதனால் அது அடைந்த நன்மைகள் அளப்பரியது. பனிப்போர்க்காலத்தில் எதிரணியில் இருந்த இந்தியாவை அரவணைக்க முயல்கின்றது. இந்து சமுத்திரப் பிராந்தியத்த்தின் தனது ஏஜண்டுகளில் ஒருவராக இந்தியாவுக்கு குறிப்பிடத்தக்க இடத்தை அது கொடுக்க முன் வந்துள்ளது.

ஜப்பான் பாகிஸ்தான் தென்கொரியா போன்ற நாடுகள் அதற்கான நீண்ட நாள் ஏஜண்டுகள். அதே நேரம் சோவியத்துக்கு அடுத்தபடியாக வல்லரசாக வளர்ந்து வரும் சீனாவுக்கு காத்திரமான எதிரியாக இந்தியாவை முன்னிறுத்தவும் செய்யும். அதற்கான முன் நடவடிக்கையே அமெரிக்கா இந்தியா இடையிலான அணு ஆயுத ஒப்பந்தம். தேவைப்படும் அளவில் தன்கண்காணிப்பில் வளர்த்து விடுவதும் கட்டுப்படுத்துவதும் அமெரிக்காவின் நோக்கம். அதாவது இந்தியா எப்போதும் தனிப்பெரும் வல்லரசாக வளர்ந்து விட முடியாது என்பது சொல்லாமல் சொல்லப்படும் பாடம்.

அதே நேரம் இந்தியா தப்பித்தவறி அமெரிக்காவின் கையை மீறிச் செல்ல முற்பட்டாலும் அதை அழிக்கும் கத்தி பாகிஸ்தான்,அதையும் சம நேரத்தில் அமெரிக்கா உருவாக்கியே வைத்திருக்கின்றது. அப்படியொரு நிலமைக்கு இந்தியா வராது என்று அமெரிக்கா நம்புவதற்கு நிறையவே காரணங்கள் இருக்கின்றன.

1) இந்திய அரசியல் அமைப்பு. கோணங்கி அரசியல் அமைப்பு உருவாக்கி வைத்திருக்கும் கறைபடிந்த அரசியல்வாதிகள்.

2) சீராய் செப்பனிடாத அடிப்படைக் கட்டமைப்புகள். வீங்கி வெடித்த ஏற்றத்தாழ்வுகள். உ+ம் ஒரு வேளை சோற்றுக்கு ஆலாய்ப்பறக்கும் மக்கள். சந்திரனைச் சுற்றும் சந்திராயன்.

3) இன மதங்களால் முரண்படும் சமுதாயங்கள்.அவற்றுக்கிடையே தீர்க்கப்படாத புரையோடிப்போன பிரச்சினைகள்.

4)கூடிய மக்கள் தொகைப்பெருக்கமும் அதைத்தாங்க முடியாத குறைந்த பொருளாதார வளர்ச்சியும்.

இன்றைய அமெரிக்க கொள்கைப்படி இந்தியாவின் எஜமான விசுவாசத்திற்கு கிடைத்த பரிசு தான் இலங்கை வரை அதனால் நக்க முடிகின்றது. இஷ்டப்படி அதனால் இலங்கை நேபாளம் என்று யூரின் போக முடிகின்றது.

இந்தச் சலுகையாலேயே இலங்கையில் இந்தியா முன்னிலை படுத்தப்படுகின்றது. இதை ஈழத்தமிழ் மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையைப் பொறுத்தளவில் வல்லரசுகளைக் கவர்வது இந்து சமுத்திரத்தில் அதன் அமைவிடமும் திருகோண மலை த்துறைமுகத்தின் முக்கியத்துவமும்.
அமெரிக்காவின் இன்னுமொரு செல்லப்பிள்ளையான ஜப்பானுக்கான எண்ணெய்ப்போக்குவரத்து வழித்தடம் இலங்கையைச் சுற்றியே அமைகின்றது.அதையொட்டியே அமெரிக்க ஜப்பானியக் கவனிப்பு இலங்கையின் மீது இருக்கின்றது.

அமெரிக்க ஜப்பானிய நலன்களுக்கு எதிரான சீனாவின் ஆதிக்கம் அங்கு வருவதை அவை என்றுமே அனுமதிக்க மாட்டா. இதை நன்கு அறிந்து கொண்ட சிறிலங்காவின் சீன நட்பு நாடகம் நன்கு வேலை செய்கின்றது. அமெரிக்காவும் ஐரோப்பாவும் சிங்களத்தின் இழுப்புக்கெல்லாம் வளைந்து கொட்டின.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் குண்டு வைக்காத புலிகளைப் பயங்கரவாதப்பட்டியலில் சேர்த்துக்கொண்டதும் சிங்களச் சிறிலங்காவை குஷிப்படுத்தவே. பாதிக்கப்பட்டவர்களுக்காகப் போராடுபவர்களை குற்றம் சொல்லும் தந்திரம் இது. அவர்களின் போராட்டவலுவைச் சிதறடிக்கச் செய்து தங்களையே தற்காத்துக்கொள்ளும் நிலைக்குக் கொண்டுவருதல். இதுவே கனடா போன்ற இரண்டாம் நிலை நாடுகளும் பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்துக்கொண்ட வரலாறு. அதே நேரம் நேரடித்தாக்கத்தில் அதிக சேதத்தை ஏற்படுத்த முடியாத நோர்வே போன்ற ஸ்காண்டி நேவியன் நாடுகளைப் பேச்சாளர்களாக வைத்துக்கொண்டிருக்கின்றது.

அமெரிக்கா அதன் நட்பு நாடுகளிக்கு ஆதரவாக ஈழத்தமிழர்களை "வெல்ல" முடியாத ஒரு கட்டத்தில் அமெரிக்காவின் வால் பிடி நாடுகளான சவூதி பாகிஸ்தான் ,தென் கொரியா போன்ற நாடுகளும் புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இது தான் இன்றைய அரசியல் பொருளாதாரம் ,ஜனநாயகம், மனிதநீதி எல்லாம்.

இதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். குட்டி நாய்களுக்கு சோறு போடுவதற்குப் பதில் பெரிய நாய்களுக்கு எலும்பு காட்டுவது பெரிய பலன் தரும். இடைத்தரகர் இல்லாது எலும்பு சாப்பிடுவது எல்லோருக்குமே பிடிக்கும்.

அதற்கு நாம் செய்ய வேண்டியது எல்லாம் இடைத்தரகர்களை விரட்டியடிப்பதே. அதற்கான ஒற்றுமையும் பலமும் இராஜதந்திரமும் நமக்கு வேண்டும். தமிழ் ஈழத்தின் ஓரங்குல நிலமும் பறிபோகக் கூடாது. அதே வேளை நிலப்பரப்பை இன்னும் பெருக்கிக் கொள்ளலாம். யுத்தத்தை எம்மண்ணில் நடாத்துவது மிகப்பெரிய தவறும் பின்னடைவுமாகும். சிங்கள மண்ணுக்கு விரிவு படுத்த வேண்டும். யாரையும் நிம்மதியாக இருக்கவிட்டால் நாமும் நிம்மதியாக இருக்க முடியாது.

பலஸ்தீனத்தில் ஹமாஸ் செய்வது நல்லதொரு முன்னுதாரணம். ராக்கட்டுகள் விழுந்து வெடிப்பது இஸ்ரேலிய மண்ணில். சேதம் இஸ்ரேலியர்களுக்கு. ஹமாஸையும் உலக நீதி ஒதுக்கித்தான் வைத்திருக்கின்றது. ஆனாலும் அவர்கள் அழிந்து போகவில்லை. அழிக்கமுடியாது. இஸ்ரேல் ஆயுத இராணுவ தொழில் நுட்பத்தில் இந்தியாவை விட மேன்மையானது. அமெரிக்காவிற்கு சவால்விடும் வலிமை கொண்டது.

தோற்கடிக்கப்படும் சிங்களவர்கள் அமெரிக்க நலன்களுக்கு துணை போக முடியாதவர்கள். அமெரிக்காவும் அதிக காலம் அவர்களுடன் இழுபட்டுக்கொண்டிருக்காது. இந்தியாவோ சீனாவோ பாகிஸ்தானோ அமெரிக்காவோ நீண்ட நாள் நிரந்தர நண்பராகவோ பகைவராகவோ இருக்க முடியாதவர்கள். அவர்களின் தேவை அப்படிப்பட்டது. காலப்போக்கில் புதிய வல்லரசுகள் வேறு திசைகளிலிருந்தும் உருவாகலாம்.

ஆகவே இப்போது ஈழத்தமிழர் வாழுவதற்கு இந்தியாவை அலட்சியம் செய்ய வேண்டும். இந்தியாவின் வார்த்தைகளுக்கு மதிப்பில்லை என்பதை உணர்த்தவேண்டும். இந்தியா மீது நாங்கள் காட்டும் அலட்சியம் ஒரு அமெரிக்காவையோ சீனாவையோ அல்லது ஒரு உகண்டாவையோ நம்மிடம் நெருங்கிவர வழி வகுக்கும்.

இது சாத்தியமா ? என்று நீங்கள் யோசிக்கக் கூடும். உங்கள் உயிர் வாழ்தல் உங்களுக்கு முக்கியம் என்றால் நீங்கள் இதைச்செய்தே ஆகவேண்டும். அதே நேரம் வன்னிக்காடுகளில் அலையும் சிங்கள இந்திய இராணுவங்களை அங்கேயே குழி தோண்டிப்புதைக்க வேண்டும். இதில் உங்கள் மனதிலுள்ள புத்தரையும் காந்தியையும் பிடுங்கி எறியுங்கள். அவர்களுக்கு அங்கே மட்டுமல்ல எங்கேயும் இப்போது தேவையில்லை. யாரும் அவர்களைப் பின்பற்றுவதும் இல்லை.

இரத்தத்தைக்கொட்டும் நாம் நிணங்களாய்ப்பிய்த்தெறியப்படும் நாம் அவர்காளைத் தூக்கிச் சுமக்கவேண்டியதில்லை. உங்களுக்குத் தெரியுமா? இஸ்ரவேல் அடாவடியில் பறிக்கப்பட்ட மண்ணில் உருவானது. பலஸ்தீனத்தில் பயங்கரவாதத்தை விதைத்தவர்கள் அவர்கள். உலக நாடுகள் அனைத்தாலும் அங்கீகரிக்கப்படாத நாடு அதுதான். ஆனாலும் உலக நீதி அவர்களைப்பயங்கரவாதிகள் பட்டியலில் போடவில்லை. சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு வரவில்லை. சூட்டுப்போட்ட கனவான்களாக உலகம் முழுவதும் வலம் வருகின்றார்கள். காரணம் அவர்கள் பலம். பல நாடுகளை அடிமைப்படுத்த பொருளாதாரரீதியில் துணை நிற்கின்றார்கள்.

கியூபா என்ற சின்னஞ்சிறு நாட்டையும் அமெரிக்காவின் உலக நீதி தடை செய்தது. மனிதாபிமான அமைப்புக்கள் எல்லாம் பலபக்கங்களுக்கு மனித அவலம் பற்றிப் புலம்பிக்கொண்டன. கியூபா இன்னும் சந்தோஷமாக இருந்து கொண்டிருக்கின்றது. இஸ்ரேல் ஒரு முகம் என்றால் கியூபா மற்றொரு முகம்.

இப்படித்தான் அவரவர் தேவைக்காக முகங்கள் மாறிக்கொண்டிருக்கும். எங்கள் தேவை தமிழ் ஈழத்தில் சுதந்திரமாக வாழுவது. அதைப்புரிந்து கொள்வோம். அது புரியாவிட்டால் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான அகதிகளாய் வாழ்ந்த யூதரைப்போல ஒரு அகதி இனம் உருவாகும். அது ஈழத்தமிழ் இனம்.

இந்தியாவை அலட்சியப்படுத்தினால் நாங்கள் ஒன்றும் தனிமைப்பட்டுப்போவோம் என்ற ப்யம் வேண்டாம். கள்ளனுக்குக் கள்ளன். எதிரிக்கு எதிரி. இது தான் இன்றைய உலக ஒழுக்கு. இல்லாவிட்டால் எங்கோ இருக்கும் ஈராக் இஸ்லாமியர்களை அழிக்கும் உலகம் கொசோவா இஸ்லாமியர்களுக்காகக் குரல் கொடுக்குமா? ஒன்றின் நலிவு மற்றையதன் தேவை. ஒன்றின் ஆதாயம் மற்றையதன் வாழ்வு அல்லது சாவு.

நமக்கு முன்னால் உள்ளதெல்லாம் முடிவெடுக்கவேண்டிய இரும்புத் தருணம். தமிழக ஆதரவு போய்விடும் என்ற கவலையும் வேண்டாம். இப்போது ஆதரவளிப்பவர்கள் தமிழுணர்வால் தமிழராய் ஆதரவளிக்கின்றார்களேயன்றி இந்தியர்களாய் அல்ல. அது போல இப்போது ஆதரவளிக்காதவர்கள் எப்போதும் ஆதரவு அளிக்கப்போவதில்லை.

வாழப்போவதும் நாம் சாகப்போவதும் நாம். இதுவரை இத்தனை உயிர்களைத்தொலைத்துவிட்டு இரந்து நிண்றதன் பலன் சிலபல அறிக்கைகள். ஆயுதத்தைக் கீழே போடு என்ற ஆணவப் புலம்பல். பாதிக்கப்பட்டவர்களையே பாதிப்பின் குற்றவாளியாகச் சுட்டப்படும் அயோக்கியத்தனம். இந்தியாவைப்பகைப்பதா? விளைவு விபரீதம் ஆகும் என்ற மிரட்டலும் கதறலும் தெரிகின்றது. இந்தியாவிடம் இரந்து நின்றபோதும் எங்களுக்குக் கிடைத்தது இதுவேதானே. ஆகவே இழப்பதற்கு எங்களிடம் எங்கள் உயிரைத்தவிர வேறு என்ன கிடக்கின்றது.

துணிந்து நின்றால் உயிர் வாழும் தகுதியாவது கிட்டும். நாயைப்போல சுடப்படாத மேன்மை கிடைக்கும். நாலு பேர் வந்து மண் தூவும் பாக்கியம் கிடைக்கும்.

இந்தியாவை அலட்சியப்படுத்தல் என்பது தொடக்கமே. போக வேண்டிய தூரம் அதிகம் இருக்கலாம். கண்ணுக்குத் தெரிந்தவரை முன்னோக்கிப் போனால்தானே போக வேண்டிய மிச்சத்தூரம் தெரியும்.

2 comments:

prabhu said...

i feel shame as indian.India is a filthy nation.

Let we tamils should organise big as TAMILS..

இட்டாலி வடை said...

வாருங்கள் பிரபு!

எம்மினத்தை அழிக்க இந்திய அரசு கங்கணங் கட்டிக்கொண்டிருக்கையில் வெறுமனே உயிர் விட நாம் ஒன்றும் ஜந்துக்கள் அல்லவே...