Wednesday, February 18, 2009

உடைபடும் இந்தியப் "பிம்"பங்கள்


நினைத்துப் பார்க்கும்போதே ஆச்சரியமாயிருக்கின்றது. கோபுரத்தில் இருந்த எண்ணங்கள் குப்பைக்குழியில் உறவாடும் காட்சி அதிர்ச்சியையும் ஆச்சரியம் கலந்த அவலத்தையும் தருவது தவிர்க்க முடியாதது. எனது இந்தியப் பிம்பங்களுக்கும் இதுவே நிகழ்ந்திருக்கின்றது.

1984 இல் இறவாப் புகழுடன் இருந்த அன்னை இந்திரா இறந்துபட்டபோது ஒரு கணம் விக்கித்து விக்கி விக்கியழுத காட்சி கண் முன்னால் தெரிகின்றது. இந்தியா என்பது ஒரு நாடல்ல என்பதுவும் ஒரு ஆதர்ஸம் என்பதுவும் ஈழத்துத் தமிழனால் ஒத்துக்கொள்ளப்பட்டிருந்தது அந்தக் காலத்தில். ஆட்டிடைக் குலத்தில் பிறந்த கோவணக் காந்தியின் சத்திய சோதனை பைபிளாகப் பார்க்கப் பட்டது அப்போது. ரோஜாவின் ராஜா நேரு எங்களுக்கும் பிரியமுள்ள மாமாவாகிப்போனதும் அப்போதுதான்.

கோகலே போன்ற தலைவர்களையெல்லாம் பின் தள்ளிக் காந்தி முன் வந்ததோ தன் விருப்புக்குரிய நேருவை முன்னிறுத்தி இந்தியாவைத் துண்டு போட்டதோ கூட எங்களுக்குப் பெரிதாகப் படவில்லை. சொல்லப்போனால் பாகிஸ்தானை உருவாக்கிய ஜின்னாவின் மீது கோபம் கூட இருந்தது.

இன்று நாங்கள் இரத்தத்தில் குளிக்கும் போது அதே தவறைச் செய்யத்தவறிய இராமநாதன் ஜீ ஜீ போன்ற தமிழினத்தலைவர்களின் மீது கோபம் வருகின்றது.

காஸ்மீரத்தை இந்தியாவுடன் சேர்க்க முற்பட்ட "இந்து" முட்டாள் மன்னனையும் மன்னிக்கும் பக்குவம் அன்று இருந்தது. இன்று எம் இருப்புக்காகப் போராடும் போது அம்மக்களின் கண்ணீரினதும் செந்நீரினதும் ஈரம் புரிகின்றது. முட்டாள் மன்னனின் வேண்டுதலுக்காக காஸ்மீரத்தைப் பிரிக்க முற்பட்ட ரோஜாவின் ராஜா தன் புஜ பலத்தால் ஜின்னாவின் மூச்சை அடக்கியிருந்தால் இன்று பாகிஸ்தான் என்ற எதிரியின் மிரட்டல்கள் இல்லா அகன்ற பாரதம் இருந்திருக்கும் என்ற எண்ணமும் வந்தே போகின்றது. துணிவில்லாப்பாட்டனின் பேராண்டிக்கு அந்தத் தைரியம் இருந்தது என்பதை இன்றும் இரத்த ஈரத்தில் காய்ந்து போக ஈழத்துத் தெருக்களும் அந்த மாறாத் துயரத்தை விலக்கி வைக்கத்தெரியாது கலங்கிக்கொண்டிருக்கும் மக்களுக்கும் தெரியும்.

இந்தி(ய) இராணுவம் துடைத்தழித்த சுவடுகளும் கிழித்தெடுத்த யோனிகளும் தமிழ் இரத்தமே சிந்தியது. சோழச் செருக்குகளின் தினவெடுத்த தோள்கள் கலிங்கத்திலிருந்து இறக்கியிருந்த புளிச்ச தயிரின் நிணம் மணக்கும் பூனூல் புரோகிதரின் வர்ணத்தில் கலந்து விட்ட தமிழகத் தமிழனின் இரத்தமும் தன்னைத் தாழ்த்திக்கொண்டு சாதி பார்த்துப் பிரிந்து நிற்கின்றது.

வாள் நுனிக்கில்லா வல்லமை புண்ணாக்குப் புரோகிதரின் பாவாடை நாடாவுக்கு இருப்பதே இன்றைய பாரதம். இராஜீவ் என்ற மக்கள் மன்னனின் படுக்கை அறைக்கு இன்று பாரதமே கட்டுண்டிருப்பதே காந்தியின் கனவை நனவாக்கிய அகன்ற பாரதம்.

வெள்ளையரின் நிர்வாக ஒழுங்கு படுத்துதலே இந்தியா. அக்தில்லாது அத்தேசம் எக்காலத்தும் இருந்ததில்லை. இந்தியப்பல்லாக்கை இன்று தோள் கொடுத்துச் சுமப்பது எமது தமிழரே. அடிமையாய் வாழ்வதில் சுகம் காணும் சோம்பேறி இனம் தமிழினம்.

மலையாளத் தெலுங்கு கன்னடக் கம்மனாட்டிகளுக்கு கட்டம் கட்டிச் சலாம் போட கோஷ்டி கட்டித் தமிழன் தரையில் உருளும் புண்ணிய பூமியே தமிழகம். வந்தாரை வாழ வைக்கும் தமிழினம் என்று எதுகை மோனையுடன் தன்னையே எள்ளி நகையாடும் உயரிய மனம் படைத்தவனே தமிழன்.

இத்தனை உயிர்கள் வெந்து பட்டும் இன்னும் இழுபறி நிலையில் அடுத்த தேர்தலில் தேர்ந்தெடுக்க தமிழனே இல்லாத் தலைவர்களை வைத்துக் கொண்டு
கன்னடப் பாப்பாத்தி செயலலிதா தெலுங்கு திம்மன் விசய காந்த் கன்னடத்துக் கண்டக்டர் ரசனி... தமிழனைக்காட்டிக் கொடுத்து உயிர் தரித்து வந்திருக்கும் மு.க ...முடிவில்லாத்தலையெழுத்துடனும் முன்னேறும் கனவுடனும்.... தமிழன்.

இந்தி(ய) ஜனநாயகம் இதுவும் கொடுக்கும் இன்னும் கொடுக்கும். அகன்ற பாரதக் கனவில் உன் துண்டையும் பறித்தெடுக்கும். பாரத் மாதாக்கீ ஜே.. என்ற கோஷத்துடன் உன் வயிறும் நிறையும்.


அகன்ற பாரதக் கனவு வன்னிக்காட்டிலும் யாழ் மணற் திடரிலும் கால் பதிக்கும் காலம் எல்லாம் அவர் கழுத்துத் தறிக்கும் ஓர்மத்துடன் அன்னை இந்திராவுக்காக அழுத அதே கண்கள் ரெளத்திரத்துடன் காத்திருக்கின்றன.

உயிர் தறிக்கும் தவ்பீக்கள் ஒன்றும் உருவானவர்கள் அல்ல.. உருவாக்கப்பட்டவர்கள். உன்னால் உன் ஆணவத்தால் உன் புஜ பலத்தால் இல்லை உன் வீணாய்ப்போன இந்திரியத்தாலும். அதே கணக்கு நேர் செய்யப்படுவதற்காக வன்னிக்காட்டில் ஆக்ரோஷத்துடன் காத்திருக்கின்றது.



இந்தி ராமன் குரங்குகளாய்க் கண்ட வாலிகள் முடிவெடுக்க வேண்டிய நேரம் இது. அண்ணனைக் கொலை செய்து இராட்சியத்தை அடையும் கனவுகள் உண்டாயின் அவ்வாறே இருந்து கொள்ளுங்கள். உங்கள் ஆயுளும் நீடித்திருக்கும் உங்கள் மனைவிகளையும் தள்ளி வைத்திருக்கும் வரை. கோடியாக் கரை வரை பரந்திருக்கும் மீனவக் குகன்களும் உங்கள் தோழமையைத் தரம் பிரித்துப் பாருங்கள். உங்கள் உயிரைக்குடிக்கும் பகைவர்களைத் தோழமை செய்யும் முகர்ஜிகளையும் இனம் கண்டு கொள்ளுங்கள்.

இருபதே மைல் கடலெல்லையிலுள்ள தமிழ் உனக்குப் பெரிதா இருநூறே மைல் தொலைவுள்ள பண்டிட்/முல்லா உனக்குப் பெரிதா..? தமிழ் ஈழம் கிடைத்து விட்டால் கச்ச தீவென்ன காங்கேசந்துறையும் உன் துறையாகுமே...

எது எப்படியிருந்தாலும் இந்தியப் பெரு நிலவாதத்திற்கு அஜீரணம் கொடுக்கும் குளிகை வன்னிக்காடுகளில் தான் தயாராவதாய் ஒரு கனவு. அது இத்தாலியப் பிஸ்ஸாக்களுக்கும் பெங்காலிப் பரோட்டாக்களுக்கும் தெரியும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்பதே தமிழன் கருத்தாகும்.

1 comment:

பதி said...

//இந்தியப் பெரு நிலவாதத்திற்கு அஜீரணம் கொடுக்கும் குளிகை வன்னிக்காடுகளில் தான் தயாராவதாய் ஒரு கனவு. அது இத்தாலியப் பிஸ்ஸாக்களுக்கும் பெங்காலிப் பரோட்டாக்களுக்கும் தெரியும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்பதே தமிழன் கருத்தாகும்.//

அந்த நன்நாள் விரைவில் வரவேண்டும்... அதற்கு முன் இவர்கள் எத்தனை உயிர்களை பலி கொள்ளப் போகின்றனோரோ....