இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலைக்கு அமெரிக்க உளவு நிறுவனம்தான் காரணம் என்று தமிழகத்தின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்திலிருந்து ஒளிபரப்பாகும் "தமிழன்" தொலைக்காட்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10.02.08) ஒளிபரப்பான "வெளிச்சம்" என்ற நேரடி நிகழ்ச்சியில் பார்வையாளர் ஒருவர் கேள்விக்கு திருமாவளவன் பதிலளித்ததாவது:
ராஜீவ் காந்தி படுகொலையில் சர்வதேச அளவிலான சதி உள்ளது, குறிப்பாக அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. திட்டமிட்டு சதியை நிறைவேற்றியிருப்பதாகவே கருதுகின்றோம்,
ஏனெனில். மூன்றாம் உலக நாடுகளில் மிகப்பெரிய வல்லரசாக வளர்ந்து வரும் இந்தியாவில் ராஜீவ் காந்தியின் தலைமை அமெரிக்க வல்லரசுக்கே ஓர் அச்சுறுத்தலாக விளங்கியது. சுயேட்சையாக முடிவெடுக்கவும் தற்சார்பு பொருளாதாரக் கொள்கையை வளர்த்தெடுக்கவும் வலிமை பெற்றவராக ராஜீவ் வளர்ந்து வந்தார்,
இந்நிலையில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளை தமது இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற அமெரிக்க வல்லரசின் கனவு ராஜீவ் காந்தியின் வளர்ச்சியால் தகர்ந்து விடும் என்று அமெரிக்கா கருதியது.
திருகோணமலையில் இராணுவத் தளத்தை அமைப்பதற்கு நெடுங்காலமாக முயற்சித்து வருகின்ற அமெரிக்காவுக்கு ராஜீவ் காந்தியின் வலிமை மிக்கத் தலைமை பெரும் முட்டுக்கட்டையாக மாறும் என்று அமெரிக்கா கருதியிருக்கக்கூடும்,
இச்சூழலில் 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில். ராஜீவ்காந்தி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றினால் அது அமெரிக்காவின் நோக்கத்துக்கு நல்லதல்ல என்று கருதியிருக்கலாம். ஆகவேதான் ஈழத் தமிழர்களுக்கும் ராஜீவ் காந்தி அவர்களுக்குமான முரண்பாட்டை அமெரிக்க அரசு தமக்கு சாதகமாக பயன்படுத்தியிருக்கக்கூடும் என்று ஐயப்படுகின்றோம்.
ராஜீவ் காந்தியின் படுகொலையில் புலிகள் மட்டுமே சம்பந்தப்பட்டிருந்தால் புலிகள் அல்லது ஈழத் தமிழர்களை மட்டுமே விசாரித்திருக்க வேண்டும்.
சி.ஐ.ஏ. நிறுவனத்தோடு தொடர்புடையவர்கள் என்னும் ஐயத்திற்குரிய நபர்களான சந்திராசாமி, சுப்பிரமணியசுவாமி ஆகியோரிடம் ஜெயின் கமிசன் விசாரணை நடத்தியது ஏன்?
அந்த விசாரணையில் வெளியான உண்மைகள் என்ன? அதனை வெளிப்படுத்தாதது ஏன்?
ஒரு தேசத்தின் தலைவரை அவ்வளவு எளிதாக போராளிக் குழுக்களால் நெருங்கிவிட முடியாது என்பது உலகறிந்த உண்மை.
பெரும்பாலும் சர்வதேச அளவில் வல்லரசுகளின் சதியால் மட்டுமே இத்தகையப் படுகொலைகள் நடத்த முடியும் என்பது வரலாற்றுச் சான்றுகளாகும்,
எனவே. அமெரிக்க வல்லரசைச் சார்ந்திராமல். பொருளாதாரம் மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை தற்சார்பு நிலையில் இந்தியாவை வல்லரசாக்குவதில் ராஜீவ் காந்தி வளர்ந்து வருகின்றார் என்கிற அச்சத்திலும் திருகோணமலையில் காலூன்ற விடமாட்டார் என்ற அச்சத்தாலும் சி.ஐ.ஏ. பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் சிலரைப் பயன்படுத்தி ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்திருக்கலாம் என்று வலுவாக நம்புகின்றோம்.
அத்துடன் இந்திய அமைதிப் படையால் ஈழத் தமிழர்கள் மற்றும் விடுதலைப் புலிகளுடன் ராஜீவ் காந்திக்கு ஏற்பட்ட முரண்பாட்டைச் சாக்காக வைத்து புலிகள் மீது அந்தப் பழியை திருப்பிவிட்டது என்றும் நம்புகின்றோம்.
எனவே ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் வெளியான உண்மைகள் அனைத்தையும் இந்திய அரசு இந்திய நாட்டு மக்களின் பார்வைக்கு வெள்ளை அறிக்கையாக வெளியிடக் கேட்டுக்கொள்கின்றோம் என்றார் திருமாவளவன்
Monday, February 11, 2008
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
so ltte just carried out what CIA wanted? what a shame to Eelam people who were raped by IPKF
or did ltte try to get 2 birds in one shot?
money from CIA/US and revenge for IPKF attrocities?
i am proud of LTTE
and now we want India to not to support SL....what a logic we(Tamils) have....
//-....என்ற அச்சத்தாலும் சி.ஐ.ஏ. பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் சிலரைப் பயன்படுத்தி ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்திருக்கலாம் என்று வலுவாக நம்புகின்றோம்.....//
என்ற திருமாவின் வார்த்தைகளிலேயே உங்களுக்கான விளக்கம் இருக்கின்ரது...நீங்கள் ஒரு "வெத்து வேட்டு " என்பதை அடிக்கடி நிரூபிப்பதையிட்டு நீங்கள் பெருமை???ப்படலாம்....
Hi Rausu,
enna neeya news pottu neya
penn nodam idurra athulla enna solla vara Rausu.
yar vethu vettu?? plz explain correct if you say Thiruma that one means
you are punnune naiyee go to read one resent article bye kumudam reporter by poet and ex ADMK party Thiru Puthumaipithan
He say correctly all the vethout of congress and DMK and ADMK how they take and use for their own gain for Puli matter.
you know one thing all of them think all over the world Tamilan live with safte and mannamulla life that is they like it
siva
puduvai
புதுவை சிவா ...என்ன குழப்பம்..
வெத்து வேட்டு fபுரொம் ஆப்கானிஸ்தான் கேட்ட கேள்விகளுக்கே பதில் சொல்லியிருக்கின்றேன்..
குப்பை போடுவதற்கென்றே வெத்து வேட்டு வைத்திருக்கும் பதிவு அது.
புதுமைப்பித்தனின் கட்டுரையும் நான் வாசித்திருக்கின்றேன்..
இந்தியாவிடம் நாங்கள் கேட்பது (உதவி என்றே வைத்துக் கொள்ளுங்கள்) சிங்களப்பேய்களை முண்டு கொடுப்பதை விட்டு ஒதுங்கி நில்லுங்கள்.( உங்கள் படைகளும் வேண்டாம் ...ஒரு ஆயுதமும் வேண்டாம்..)
மனச்சாட்சியுடன் இதை நீங்கள் செய்தாலே ..தமிழ் ஈழத்தை நாங்கள் எடுத்துக் கொள்வோம்...
வெத்து வேட்டு போன்றவர்கள் இதை விளங்கிக் கொள்ளுங்கள்.... ஆணவத்தில் ஆடாதீர்கள்..அது...நல்லதற்கு அல்ல
//
மூன்றாம் உலக நாடுகளில் மிகப்பெரிய வல்லரசாக வளர்ந்து வரும் இந்தியாவில் ராஜீவ் காந்தியின் தலைமை அமெரிக்க வல்லரசுக்கே ஓர் அச்சுறுத்தலாக விளங்கியது. சுயேட்சையாக முடிவெடுக்கவும் தற்சார்பு பொருளாதாரக் கொள்கையை வளர்த்தெடுக்கவும் வலிமை பெற்றவராக ராஜீவ் வளர்ந்து வந்தார்,
//
இந்த காமடிய சொல்லும் போது திருமாவுக்கு சிரிப்பு வரவில்லையா என்ன?
Ravusu what I don't understand is why you ltte supporters are asking India not to support Srilanka?
can you explain that? that is all i am asking..aren't you stronger than India...
SLArmy oru mayir...Indian army is another mayir to LTTE..isn't it :))
Post a Comment