வலைப்பூ வில பாப்புலராவணும் என்னா வழின்னு கொஞ்சூண்டு திங்க் பண்ணிப் பாத்தேனா .... ஒண்ணும் கிளிக்காவல்ல......
சரி வலை மேஞ்சு பாக்கலாம் ....ஏதாச்சும் கிளிக்காவாதுன்னு மேய்ய்ஞ்சு
பாத்தா அடேங்கப்பா .... நம்மாளிங்க பலே கில்லாடிங்க....
பாப்புலராவ 108 வழின்னு பொஸ்தவம் போட்ற ரேஞ்சில ஐடியா வச்சிகிறானுவ ........
1. பதிப்ப படிக்கிரீங்களோ இல்லியா காமன்ஸ் சுட்டிய தட்டி 'பலே ..நல்லாச் சொன்னீங்க அப்பிடீன்னு தட்டிடணும் ( அதும் பின்னாடி அவரு நீங்க என்ன புண்ணாக்கு பதிவு போட்டாலும் வந்து ஒரு குத்து போடுவாரு )
2.ஜோராக்கீதப்பா .... அந்தா மூணாவது பந்தில சொல்லுரதில ஒடன் பாடில்லீப்பா அப்பிடீன்னு தட்டி உடணும் ( படிச்சுப் பாத்தவனுங்கெல்லாம் ஆளாளுக்கு தலைய பிச்சுக்கிடுவானுங்க )
3. இல்லீனா வடிவேலு கணக்கா குண்டக்க மண்டக்கன்னு பதில் போட்டுடணும்.
4. யாராச்சும் அப்போ அப்பிடீன்னிங்க இப்போ இப்பிடிச் சொல்லீரீங்கன்னா
இதுதான் அது ...... அதுதான் இதுன்னு கவுண்டமணி செந்தில் கணக்கா பீலா வுட்டுக்கலாம். ( பின்னாடி வாரவங்க இலக்கிய சர்ச்சை அப்பிடீன்னு வாய் மூடாம பாத்துப்பாங்க கொஞ்சம் துடியானவங்க ஒங்களை ஆதரிச்சு இல்லே எதித்தாவது ஏதாவது எழுதிப்புடுவாங்க)
5. அப்புறம் நீங்க எங்கை போனாலும் உங்க பின்னாடி ஜேஜேன்னு கூட்டந்தான் போங்க
6. இல்லேன்னா வெளங்காத மூணு நாலு வார்த்தைங்களை வச்சி கடாசிக்கிட்டிருக்கணும். இஸம் ,பூர்ஷ்வா. பின்னவீனத்துவம், முன்னவீனத்துவம் இல்லாங்காட்டி பெண்ணிலை வாதம் தலித்து அப்பிடீன்னு அடிக்கொரு தரமாச்சும் பாவிக்கணும்.
7. இல்லாங்காட்டியும் தாப்பான் மாப்பான் சீத்திரன்னு சேறு வீசணும்.
8. இல்லாங்காட்டியும் அந்தப் பதிப்பூ என்னோடதில்லீப்பா .. போலி உட்டது அப்பிடீன்னு கலாய்க்கனும். ( அது பாத்ததும் அனுதாப அலையில் அப்பிடியே அள்ளிக் கிடனும்.)
10. அதும் இல்லீனா நம்ம வழி தனி வழீன்னு செரிக்க கஸ்டமான புளிச்ச கதங்க உடணூம். அடிகடீ மார் தட்டி தொடை தட்டீ கீச்சுப்புடுவேன் ரேஞ்சில உதார் காட்டணும்.
இப்போதைக்கு இம்புட்டும் போதுங்க...
போதல்லீன்னா மல்லி தழைன்னு தனிப்பதீவு போட்டு தரம் பிரிக்கிரேன் பேர்வழின்னு உட்லாலங்கடி உடணும்.
அதும் இல்லாங்காட்டி நம்மள போல ரவுசு உடனும்.
சரீங்ங்களா ........
Thursday, January 19, 2006
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
Wonderful, awesome, excellent, great…I agree with all of your points except the last 10 points!
சரீங்கிரீங்களா ? சரீல்லிரீங்களா ?
= ரெண்டுங்கெட்டான்
-இதுங்கூட நல்லாத்தாங்க இரிக்கி
பதினொண்ணாவது பாயிண்டு
Good.You can change your blog title as you mentioned in your last point:)-.By this way you can attract more comments.
oh sorry.This previous point was mine.I accidently selected the anonymous.
இப்போது வலை(ளை?)யில் எங்கே பாத்தாலும் அது நான் இல்லை... இது நீ இல்லை... போலி... பின்னூட்டம் அப்படி இப்படி என்று புலம்புகிறார்கள்.
திடீர்னு பாப்புலர் ஆகவேண்டும் என்றால் டோண்டு மாதிரி நாமே போலியாக ஒரு வலைப்பதிவை ஏற்படுத்தி நாமே பின்னூட்டிக் கொண்டு நாமே அனுதாப அலை பெறலாம்.
அல்லது திண்ணை செருப்பு புகழ் ரமேஷ்குமார் போல மாயவரத்தான் என்றும் முகமூடி என்று வெவ்வேறு பெயரில் யாருக்குமே தெரியாமல் வலை பதியலாம்.
அல்லது காசிக்கு போண்டா, டீ, வடை இதுபோல ஏதாவது வாங்கிக் கொடுத்து அவரை நம் வழியில் இழுத்து விட்டோம் என்றால் நாம் நமது ஜாதி சங்க முயற்சிகளை அருமையாக முன்னோக்கி எடுத்துச் செல்லலாம். எதிர்க்கேள்வி கேட்பவர்களை காசி தன் தமிழ்கோமணத்தில் இருந்து நீக்கி விடுவார்.
மேல் இருக்கும் பின்னோட்டம் போட்டது நான் இல்லை.
வால்பையன்
Post a Comment